widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Monday, 17 February 2014

வாழ்வை பாழாக்கும் டிவி!!


கவல் தொழில் நுட்பத்தின் தாறுமாறான வளர்ச்சியில் விளையும் நன்மைகள் நீளமானவை என்றால் தீமைகள் அகலமானவை, ஆழமானவை, அழுத்தமானவை என்று சொல்ல வேண்டும். நவீன கண்டுப்பிடிப்புகளில் ஒவ்வொன்றும் பின்னது முன்னதை விட தீமையில் தீவிரமாகவே இருந்திருக்கிறது. ஆனால் டிவி மட்டும் இதில் விதி விலக்கு.


ஏனெனில்., தகவல் தொழில் நுட்பம் தொலைகாட்சியை தாண்டி தொலைதூரம் சென்ற பிறகும் டிவி யின் மூலம் பாவங்கள் பன்மடங்காக பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பின்னர் வந்த இன்டர்நெட் போன்ற  கண்டுப்பிடிப்புகளின்  பாதிப்புகளை விட டிவி ஆதிக்கத்தின் மூலம் வரும் பாதிப்பின் தாக்கம் தாங்க முடியாததாகவே இருக்கின்றது.


எங்கும் எதிலும் டிவி:


கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தில் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதிகமாக தீமைக்காகவே பயன்படுத்துகின்றனர். இணையதளத்தின் மூலம்  இளைஞர்களின் சிந்தனை  சிதறடிக்கப்படுகிறது என்றால்  சின்னத்திரையில்  நான்கு  வயது பிஞ்சுகள் முதல்  என்பது வயது முதியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையும் பாழாகி விடுகிறது.. "இல்லத்தரசிகளை கேட்கவே வேண்டாம்".. 


வீட்டில் மட்டும்மல.. நாம் அதை விட்டும் விலகி ஓடினாலும் தொலைக்காட்சி துரத்திக் கொண்டே வருகிறது.. இல்லை..! கூடவே வருகிறது.

பேரூந்தில் ஏறினாலும் டிவி, பிளாட்பாரத்தில் இறங்கினாலும்  டிவி, சினிமா தியேட்டரிலும் டிவி, டீ கடையிலும் டிவி, பெட்டிக் கடையிலும் டிவி, ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் அறையில் மட்டுமல்ல சிகிச்சை அறையிலும் ஆட்கொண்டிருக்கிறது இந்த டிவி.

இப்படி எங்கு திரும்பினாலும் சின்னத்திரையே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.


டிவி ஏன் கூடாது?


உலகச் செய்திகளை தெரிந்துக் கொள்கிறோம். வியாபாரச் செய்திகள், மருத்துவத் தகவல்கள், விஞ்ஞான ஆய்வுகள் பற்றி அறிய தகவல்கபோன்றவற்றை டிவி மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறதே என்று கேட்பது நாம் காதில் விழுகிறது.


ஸஹர்  நிகழ்சிகள், புனித ஹரம் நிகழ்சிகளை காணுகிறோம் என்ற வாதமும் நமக்குப் புரிகிறது. இவை கூட மார்க்க வரம்பிற்குட்பட்டு  ஒலிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க இதற்காகத்தான் இன்று டிவி பயன்படுத்தபடுகிறதா? என்பதே கேள்வி.


99% சதவீதம் பேர் சினிமாவுக்காகவும், சீரிய்லுக்ககவும் தான் டிவியை பயன்படுத்துகின்றனர்.


நாய், பூனை போன்ற மிருகங்களின் வாழ்க்கை முறைகளை படமாக்கி காட்டுகிறோம் என்று  கூறிக்  கொண்டு அவை ஒன்றையொன்று  கொஞ்சுவதையும் , புணர்ச்சி செய்வதையும் காட்டுகிறார்களாம்.

கல்வி ஒலிபரப்பு என்ற  சிறப்பு நிகழ்சிகளிலும்  ஆபாசம் நிறைந்து காணப்படுகிறதாம்!

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மதிமயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் எவ்வித  அறிவுமின்றி   மக்களை அல்லாஹுவின் பாதையை விட்டும் பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான் என்று

குர் ஆன் இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது என்று எச்சரிக்கிறது. (அல் குர் ஆன்  31:6) 

நபியவர்களின் காலத்தில் குர்ஆனை யாரும் கேட்க கூடாது என்பதற்காக ஒருவன் ஒரு பாட்டுப் பாடக் கூடிய ஓர் அடிமைப் பெண்ணை வாங்கி வந்தான்.

குர் ஆணை கேட்காதீர்கள், அதை விட இனிமையாக இருக்கும் இந்த இசையை கேளுங்கள்! என்று ஏளனமாக கூறினான். அவனுக்கு பதிலடியாக இந்த இறைவசனம்  இறங்கியது.(லஹ்வுல் ஹதீஸ் - டிவி)

இவ் வசனத்தில் கூறப்பட்டுள்ள "லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை "மெய் மறக்கச் செய்யும் பேச்சு" மற்றவற்றை மறக்கச் செய்வது மனதை முழுக்க தன பக்கம் ஈர்த்துக் கொள்ளும் விஷயம் என்று பொருள் தரக் கூடிய  கருத்துச் செறிவுள்ள வார்த்தை, இப்படிப்பட்ட பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள் எதற்காக?


மக்களை அல்லாஹுடைய மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காக  ஷரீஅத்தை ஏளனமாக விலை மதிப்பற்றதாக  ஆகுவதற்காக!


இப்பொழுது சொல்லுங்கள்! குர் ஆன் கூறும் " லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை டிவி யுடன் எப்படி ஒத்துப் போகிறது என்று!


இராக்கதை கூடாது :


 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சீரியலில் உட்கார்ந்து விட்டால் உலகமே மறந்து போய்விடும். தொழுகையிலும் குர் ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும் கழிய வேண்டிய இரவுகள் இப்படி வீணாகின்றன.


நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு இராக்கதை பேச வேண்டாமென்று தடை செய்து இருக்கிறார்கள். (திர்மிதி)


இரவு நேரத்தில் தெருவில் வீணான வெட்டிக் கதை பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஃபஜ்ர் தொழுகைக்கு எழ முடியும்?


குறிப்பாக இன்று பெரும்பாலும்  டிவியில் தான் இரவின் பெரும் பகுதி கழிகிறது.


கிரிக்கெட் போட்டி நடந்தால் கேட்கவே தேவையில்லை..

இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தூக்கத்தை தொலைக்காட்சி முன் தோய்த்து விட்டால் பிறகென்ன? மறு நாள் தொழுகை மட்டுமல்ல உலக வேலையும் கெட்டு விடும்..

ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடுவதால் நமது நாட்டுக்கு ஏற்படும் மனித உழைப்பின் இழப்பின் மதிப்பு 2007-ம்  ஆண்டிலேயே 2000 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள்.


இரவெல்லாம் டிவி க்கு முன்னால் விழித்திருந்தால் பகலில் எப்படி வேலை செய்ய முடியும்?


ஃபஜ்ர் (காலை) நேரத்தில் தூங்கினால் வாழ்வாதாரம் சேதாரம் ஆகிவிடும் என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள். (தர்கீப்)

காலை நேரத்தில் எனது உம்மத்தினருக்கு பரக்கத்- அபிவிருத்தி செய்திடுவாயாக    என்று து ஆ செய்திருக்கிறார்கள்.(அபூதாவுத்)

இந்த நபி மொழியை அறிவிக்கும் ஸக்ர் (ரலி) அவர்கள் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வியாபராதை ஆரம்பித்து செழிப்பாக வாழ்ந்தது வரலாறு.. ஆனால் நாமோ.......??? சிந்தியுங்கள்...


(இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் வேறொரு தலைப்பில் சந்திப்போம்...

No comments: