widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Saturday, 8 February 2014

மாறிவரும் உலகில் மாறாத பரிசுப் பொருட்கள்!

காலம் செல்ல செல்ல அதகேற்ப புதிய நாகரீகங்களிலும், நடைமுறைகளிலும் மனிதன் காலடியை பதிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் களமிறங்கி, இவற்றையெல்லாம் கண்டு ஆச்சர்யப் பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. 

கல்வித்தரமும் அதற்கு போட்டியாக முன்னேறி மாணவர்களும் அதற்கு நிகராக பிரமிக்க வைக்கும் வகையில் தங்களது கல்வித் திறனை வெளிக்காடடி பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு செல்கின்றனர்.

நமதூர் கல்வி நிறுவனங்களும் அதற்கு விதிவிலக்கல்ல, காலச் சூழலுக்கேற்ப கல்வித் தரம் உயர்ந்ததோடு, அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களோடு போட்டியிடும் அளவுக்கு அவர்களின் மதிப்பெண்களோடு  7 ,8 மதிப்பெண்கள் வித்தியாசம்தான் எனும்போது, ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அவர்களை தயார் படுத்துகிறார்கள் ? என்று நமதூர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

அதே நேரத்தில்,  ஒரு சில செயல்பாடுகளில் நமதூர் கல்வி நிறுவனங்கள் தற்கால சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதற்கு கடுகளவும் முயலவில்லை என்பதுதான் வேதனை.

இதற்கு உதாரணம்தான் சமீபத்தில் நடந்த பள்ளி  விழாக்கள், மற்றும் விளையாட்டு விழாக்கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்!

 காலச் சூழலுக்கேற்றார்போல் சிறிதேனும் பரிசுப் பொருட்கள் வழங்குவதில்மாற்றம் செய்யாமல் அடுப்படி சாமான்கள், தட்டு, வாலி, ப்ளாஸ்டிக் டப்பா  என நம் கல்வி நிறுவனங்கள் இந்த விசயத்தில் பழங்காலத்திலேயே இருக்கின்றனர். (இதே விலையிலோ அல்லது சிறிது கூடுதலாகவோ தரமான, இக்காலத்திற்கு ஏற்றார்போல மாணவ, மாணவிகளுக்கு உபயோகமான வகையில் பல பொருட்கள் சந்தையில் விறபனையாகின்றன)

இவ்வாறு தரமற்ற பரிசுப் பொருட்களைப் பெற்று விரக்தி அடைந்து சில மாணவர்கள் தம் பெற்றோர்களிடம் வாய்விட்டுச் சொல்லி ஆதங்கப் பட்டதோடு, பல போட்டிகளுக்கு அவர்களை தயார் படுத்தி, ஊக்கப்படுத்திய பெற்றோர்களும் விரக்தி அடைந்துள்ளதை சமீபத்தில் காண முடிந்தது.

இதனால் சில பெற்றோர்கள் இந்த தரமற்ற தட்டுக்காகத்தான் இவர்களை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி தயார் செய்தோமா? இனி அதெல்லாம் வேண்டாம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்  போதும், இனி எந்த போட்டியும் வேண்டாம், என விரக்தியின் எல்லைக்குச் சென்று அவர்களின் ஆர்வம் குறைந்துள்ளமையைக் காண முடிகிறது. 

காலச் சூழலுக்கு ஏற்றார்போலவும், கல்வித் தரத்திற்கு ஏற்றார்போலவும், கல்வி நிறுவனங்களின் தரம் ஆகியவற்றைப் பொருத்து கல்விக் கடடணங்களை உயர்த்தியுள்ள கல்வி நிறுவனங்கள், அவர்கள் நடத்தும் விளையாட்டு, கலை, இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்ப்படும் பரிசுப் பொருட்களின் தரத்தை இனி வரும் காலங்களிலாவது, மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் உயர்த்த வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும்.

இதனை கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஏதோ ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. வெளியில் சொல்ல சங்கடப்படும் பல மாணவர்கள், பெற்றோர்களின் ஆதங்கம்.

இப்படிக்கு

அஹமது ரிலா

No comments: