widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Monday, 17 February 2014

வாழ்வை பாழாக்கும் டிவி!!


கவல் தொழில் நுட்பத்தின் தாறுமாறான வளர்ச்சியில் விளையும் நன்மைகள் நீளமானவை என்றால் தீமைகள் அகலமானவை, ஆழமானவை, அழுத்தமானவை என்று சொல்ல வேண்டும். நவீன கண்டுப்பிடிப்புகளில் ஒவ்வொன்றும் பின்னது முன்னதை விட தீமையில் தீவிரமாகவே இருந்திருக்கிறது. ஆனால் டிவி மட்டும் இதில் விதி விலக்கு.


ஏனெனில்., தகவல் தொழில் நுட்பம் தொலைகாட்சியை தாண்டி தொலைதூரம் சென்ற பிறகும் டிவி யின் மூலம் பாவங்கள் பன்மடங்காக பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பின்னர் வந்த இன்டர்நெட் போன்ற  கண்டுப்பிடிப்புகளின்  பாதிப்புகளை விட டிவி ஆதிக்கத்தின் மூலம் வரும் பாதிப்பின் தாக்கம் தாங்க முடியாததாகவே இருக்கின்றது.


எங்கும் எதிலும் டிவி:


கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தில் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதிகமாக தீமைக்காகவே பயன்படுத்துகின்றனர். இணையதளத்தின் மூலம்  இளைஞர்களின் சிந்தனை  சிதறடிக்கப்படுகிறது என்றால்  சின்னத்திரையில்  நான்கு  வயது பிஞ்சுகள் முதல்  என்பது வயது முதியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையும் பாழாகி விடுகிறது.. "இல்லத்தரசிகளை கேட்கவே வேண்டாம்".. 


வீட்டில் மட்டும்மல.. நாம் அதை விட்டும் விலகி ஓடினாலும் தொலைக்காட்சி துரத்திக் கொண்டே வருகிறது.. இல்லை..! கூடவே வருகிறது.

பேரூந்தில் ஏறினாலும் டிவி, பிளாட்பாரத்தில் இறங்கினாலும்  டிவி, சினிமா தியேட்டரிலும் டிவி, டீ கடையிலும் டிவி, பெட்டிக் கடையிலும் டிவி, ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் அறையில் மட்டுமல்ல சிகிச்சை அறையிலும் ஆட்கொண்டிருக்கிறது இந்த டிவி.

இப்படி எங்கு திரும்பினாலும் சின்னத்திரையே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.


டிவி ஏன் கூடாது?


உலகச் செய்திகளை தெரிந்துக் கொள்கிறோம். வியாபாரச் செய்திகள், மருத்துவத் தகவல்கள், விஞ்ஞான ஆய்வுகள் பற்றி அறிய தகவல்கபோன்றவற்றை டிவி மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறதே என்று கேட்பது நாம் காதில் விழுகிறது.


ஸஹர்  நிகழ்சிகள், புனித ஹரம் நிகழ்சிகளை காணுகிறோம் என்ற வாதமும் நமக்குப் புரிகிறது. இவை கூட மார்க்க வரம்பிற்குட்பட்டு  ஒலிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க இதற்காகத்தான் இன்று டிவி பயன்படுத்தபடுகிறதா? என்பதே கேள்வி.


99% சதவீதம் பேர் சினிமாவுக்காகவும், சீரிய்லுக்ககவும் தான் டிவியை பயன்படுத்துகின்றனர்.


நாய், பூனை போன்ற மிருகங்களின் வாழ்க்கை முறைகளை படமாக்கி காட்டுகிறோம் என்று  கூறிக்  கொண்டு அவை ஒன்றையொன்று  கொஞ்சுவதையும் , புணர்ச்சி செய்வதையும் காட்டுகிறார்களாம்.

கல்வி ஒலிபரப்பு என்ற  சிறப்பு நிகழ்சிகளிலும்  ஆபாசம் நிறைந்து காணப்படுகிறதாம்!

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மதிமயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் எவ்வித  அறிவுமின்றி   மக்களை அல்லாஹுவின் பாதையை விட்டும் பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான் என்று

குர் ஆன் இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது என்று எச்சரிக்கிறது. (அல் குர் ஆன்  31:6) 

நபியவர்களின் காலத்தில் குர்ஆனை யாரும் கேட்க கூடாது என்பதற்காக ஒருவன் ஒரு பாட்டுப் பாடக் கூடிய ஓர் அடிமைப் பெண்ணை வாங்கி வந்தான்.

குர் ஆணை கேட்காதீர்கள், அதை விட இனிமையாக இருக்கும் இந்த இசையை கேளுங்கள்! என்று ஏளனமாக கூறினான். அவனுக்கு பதிலடியாக இந்த இறைவசனம்  இறங்கியது.(லஹ்வுல் ஹதீஸ் - டிவி)

இவ் வசனத்தில் கூறப்பட்டுள்ள "லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை "மெய் மறக்கச் செய்யும் பேச்சு" மற்றவற்றை மறக்கச் செய்வது மனதை முழுக்க தன பக்கம் ஈர்த்துக் கொள்ளும் விஷயம் என்று பொருள் தரக் கூடிய  கருத்துச் செறிவுள்ள வார்த்தை, இப்படிப்பட்ட பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள் எதற்காக?


மக்களை அல்லாஹுடைய மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காக  ஷரீஅத்தை ஏளனமாக விலை மதிப்பற்றதாக  ஆகுவதற்காக!


இப்பொழுது சொல்லுங்கள்! குர் ஆன் கூறும் " லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை டிவி யுடன் எப்படி ஒத்துப் போகிறது என்று!


இராக்கதை கூடாது :


 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சீரியலில் உட்கார்ந்து விட்டால் உலகமே மறந்து போய்விடும். தொழுகையிலும் குர் ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும் கழிய வேண்டிய இரவுகள் இப்படி வீணாகின்றன.


நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு இராக்கதை பேச வேண்டாமென்று தடை செய்து இருக்கிறார்கள். (திர்மிதி)


இரவு நேரத்தில் தெருவில் வீணான வெட்டிக் கதை பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஃபஜ்ர் தொழுகைக்கு எழ முடியும்?


குறிப்பாக இன்று பெரும்பாலும்  டிவியில் தான் இரவின் பெரும் பகுதி கழிகிறது.


கிரிக்கெட் போட்டி நடந்தால் கேட்கவே தேவையில்லை..

இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தூக்கத்தை தொலைக்காட்சி முன் தோய்த்து விட்டால் பிறகென்ன? மறு நாள் தொழுகை மட்டுமல்ல உலக வேலையும் கெட்டு விடும்..

ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடுவதால் நமது நாட்டுக்கு ஏற்படும் மனித உழைப்பின் இழப்பின் மதிப்பு 2007-ம்  ஆண்டிலேயே 2000 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள்.


இரவெல்லாம் டிவி க்கு முன்னால் விழித்திருந்தால் பகலில் எப்படி வேலை செய்ய முடியும்?


ஃபஜ்ர் (காலை) நேரத்தில் தூங்கினால் வாழ்வாதாரம் சேதாரம் ஆகிவிடும் என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள். (தர்கீப்)

காலை நேரத்தில் எனது உம்மத்தினருக்கு பரக்கத்- அபிவிருத்தி செய்திடுவாயாக    என்று து ஆ செய்திருக்கிறார்கள்.(அபூதாவுத்)

இந்த நபி மொழியை அறிவிக்கும் ஸக்ர் (ரலி) அவர்கள் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வியாபராதை ஆரம்பித்து செழிப்பாக வாழ்ந்தது வரலாறு.. ஆனால் நாமோ.......??? சிந்தியுங்கள்...


(இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் வேறொரு தலைப்பில் சந்திப்போம்...

Sunday, 9 February 2014

FLASH NEWS : சவூதி: மதினா நகரில் தீ விபத்து

சவூதி அரேபியா மதினா நகரில் உள்ள தங்கும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 15 நபர்கள் பலியானார்கள் .





சுமார் 700 நபர்கள் வரை தங்கி இருந்த அந்த தங்கும் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 130 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மரனித்தவர்களில் பெரும்பாலானாவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்த உம்ரா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது .

Saturday, 8 February 2014

லால்பேட்டையில் மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கும் நமதூர் மக்களின் பரிதாப நிலை..!

DSC05927லால்பேட்டை,கடலூர் மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று. கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, வணிகம், போக்குவரத்து மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ஊர் என்று பலரால் அறியப்பட்டது. ஆனால் இந்த ஊரில் மிக மிக முக்கியமான ஒரு வசதியான மருத்துவ வசதி இருந்தும் அது பயனற்று செயல்படாமல் உள்ளது என்பது வருத்ததிற்குறிய செய்தி.
இதனால்நம் மக்கள் படும் துயரம் எண்ணில் அடங்காதது. ஒருவருக்கு கீழே விழுந்து கை உடந்துவிட்டது, சாலை விபத்து, இரவில் நெஞ்சு வலி, என்றால் கூட காட்டுமன்னார்கோயில் ,சிதம்பரம் தூக்கி செல்லும் அவல நிலை. இது போன்ற அடிப்படை மருத்துவ உதவிக்கு முதலுதவிக்கு கூட இரவில் வந்து பரிசோதிக்கும் மருத்துவர் கூட நமதூரில் இல்லை என்பது தான் லால்பேட்டை யின் இன்றைய நிலை.
லால்பேட்டையில் எங்கு  அரசு மருத்துவமனை என்று தேடிச்சென்ற எங்களுக்கு அதிர்ச்சி,ஆஹா அருமை..லாரி நிற்கும் கூடாரமாக மாறிவிட்டது,கழிவரைக்குல் பாம்புகள்,மருத்துவமனை உள்ளே எதுவும் கிடையாது இரண்டு table, ஒரு- bed ,chair-2 அடிக்கிவைகப்பட்டுள்ளது…
குறைந்தது ஐந்து bed, இரண்டு மூன்று மருத்துவர்கள் பகலிலும் இரவிலும் மருத்துவர்கள் இருந்தாலே போதுமே..
இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்படுமா…?
லால்பேட்டையில்பல தனியார் மருத்துவமனைகள் உள்ளன இவை அனைத்தும் இருந்தும் ஒரு அவசர சிகிச்சைக்கு கூட நமதூர் மக்களால் இங்கு பரிசோதிக்க முடியாமல் கடலூர் ,புதுவை , சென்னை ஆகிய பகுதிகளுக்கு பல துயரங்ளுடன் பயனத்துக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கி செல்கின்றனர்.
தெருவிற்குதெரு மருத்துவமனை உருவாகிவிட்டது பின்பு எதற்கு மருத்துவமனை என்ற கேள்வியும் எழுகின்றன.. லால்பேட்டையில் அனைவரும் பணக்காரர்கள் கிடையாது ஏழைகளும் இருக்கின்றனர்..
மேலும் நமதூருக்கு மருத்துவமனையில் பணிபுரியும் நபர்கள் எங்கே சென்றார்கள்…??அவர்களுக்கு நமதூர் சார்பாக நிதி ஒதுக்கப்படு அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு வேறு எங்கோ பணிபுரிவதாக தகவல்கள் வருகின்றன..நமதூருக்காக மாதம் வரும் சத்து உணவுகள் எங்கே செல்கின்றன,இப்படி பல கேள்விகளை அடிக்கிக்கொண்டே போகலாம் சிந்தியுங்கள் மக்களே…!
எல்லாம் விழிப்புணர்வுக்காக இங்கே எழுத படுகிறது..!
பலஅரசியல் கட்சி தலைவர்கள் நமதூருக்கு பொதுக்கூட்டங்களுக்காகவும், சில நிகழ்ச்சிகளுக்காவும் வந்து செல்வதும் அவர்களிடம் மனு கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது..பொருத்தது போதும் தேர்தல் களம் நெருங்கிவரும் காலகட்டத்தில் அவர்களிடம் முறையான எழுத்துவடிவில் கோரிக்கை மனுவாகவும் பெற்றுக்கொண்டு வாக்களியுங்கள். நமதூர் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும்,அரசு மருத்துவமனையும் அமைவதற்கு அலட்சிய போக்கு தகற்கப்படும்…
ஏன் இந்த நிலை, இந்த நிலை எப்பொழுது மாறும்.லால்பேட்டை மக்களே! லால்பேட்டைஇளைஞர்களே! லால்பேட்டை அமைப்புகளே! அயல்நாட்டில் வசிக்கும் லால்பேட்டை அன்பர்களே! சமுக ஆர்வலர்களே! முறையான மருத்துவ வசதி இன்றி தவிக்கும் நமதூரின் நிலையை சற்று பாருங்கள். இதற்க்கு எப்பொழுது பிறக்கும் விடிவுகாலம்? பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற‌ ஆடம்பரமான செலவுகளை செய்யும் நாம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? வீனான விஷயங்களுக்கு நேரத்தை செலவழிக்கும் நாம் இதற்க்கு ஏன் நம் நேரத்தை செலவலிக்க தயங்குகிறோம்?
மருத்துவ வசதி என்பது ஒவ்வொரு ஊரின் அத்தியாவசிய தேவை. காய்ச்சல்,தலைவலிக்கு மருந்துவம் பார்க்கும் மருத்துவமனை மட்டும் நமதூருக்கு போதுமா?
அவசர சிகிச்சைக்கு என்னேரமும் செயல்படும் மருத்துவமனை லால்பேட்டைக்கு எப்பொழுது வரும்?
லால்பேட்டை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர சேவை எப்பொழுது?
இவை அனைத்தும் நம் மனதில் கேள்வியாக மட்டுமே இருக்கும், இதை வெளிகொண்டு வாருங்கள்!
தமிழக முஸ்லிம் பகுதிகளுக்கு முன்மாதிரியாய் இருந்திருக்க வேண்டிய நமதூர் சுகாதார, மருத்துவ வசதிகளில் வெட்கித் தலைகுனியக் கூடிய வகையில் மிக, மிகப்பின் தங்கியிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் நம் ஊரில் சமுதாய நலன் நாடும் சிலர் ‘மகளிர்
மட்டும்’ (கலை, அறிவியல்) கல்லூரிக்கு முன்முயற்சி எடுத்தனர். அந்த முயற்சி இன்னமும் நிலுவையில் இருந்தால் அதனைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு பத்தோடு பதினொன்றாக கலை, அறிவியல் கல்லூரியாக அல்லாமல் குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நன்கு திட்டமிட்டு “மகளிர் மட்டும் மருத்துவக் கல்லூரி” க்கு நாட்டிலேயே (அனேகமாக) முதலாவதாக விதையிட முயற்சி செய்யலாம். அந்த விதையை நலன் தரும் விருட்சமாக வளரச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வான்,
இன்ஷா அல்லாஹ்.
காத்திருக்காமல் களத்தில் இறங்க வேண்டிய தருணம். தவறவிட வேண்டாம்.
 இன்றைய இளைய தலைமுறையில் சேவை அடிப்படையில் செயல்படக்கூடியவர்களை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை.
மருத்துவமனையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத் திட்டங்கள் மட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
DSC05924லால்பேட்டையில் ஒரு மருத்துவ புரட்சியை உருவாக்குங்கள்!லால்பேட்டையின் நலனுக்காக பாடுபடும் லால்பேட்டையின் பொது அமைப்புகளே! லால்பேட்டையை வருங்காலத்தில் வழிநடத்த இருக்கும் இளைஞர்களே! நமதூரின் இந்த நிலையை மனதில்வைத்து ஒன்றுகூடி கலந்துரையாடுங்கள். ஒற்றுமையுடன் நல்லதொரு முடிவை எடுக்குமாறு கோரிக்கைகளுடன் நிறைவு செய்கிறோம்..
-சேவையுடன்,
லால்பேட்டை மெயின்ரோடு நண்பர்கள் (ss)

மாறிவரும் உலகில் மாறாத பரிசுப் பொருட்கள்!

காலம் செல்ல செல்ல அதகேற்ப புதிய நாகரீகங்களிலும், நடைமுறைகளிலும் மனிதன் காலடியை பதிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் களமிறங்கி, இவற்றையெல்லாம் கண்டு ஆச்சர்யப் பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. 

கல்வித்தரமும் அதற்கு போட்டியாக முன்னேறி மாணவர்களும் அதற்கு நிகராக பிரமிக்க வைக்கும் வகையில் தங்களது கல்வித் திறனை வெளிக்காடடி பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு செல்கின்றனர்.

நமதூர் கல்வி நிறுவனங்களும் அதற்கு விதிவிலக்கல்ல, காலச் சூழலுக்கேற்ப கல்வித் தரம் உயர்ந்ததோடு, அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களோடு போட்டியிடும் அளவுக்கு அவர்களின் மதிப்பெண்களோடு  7 ,8 மதிப்பெண்கள் வித்தியாசம்தான் எனும்போது, ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அவர்களை தயார் படுத்துகிறார்கள் ? என்று நமதூர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

அதே நேரத்தில்,  ஒரு சில செயல்பாடுகளில் நமதூர் கல்வி நிறுவனங்கள் தற்கால சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதற்கு கடுகளவும் முயலவில்லை என்பதுதான் வேதனை.

இதற்கு உதாரணம்தான் சமீபத்தில் நடந்த பள்ளி  விழாக்கள், மற்றும் விளையாட்டு விழாக்கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்!

 காலச் சூழலுக்கேற்றார்போல் சிறிதேனும் பரிசுப் பொருட்கள் வழங்குவதில்மாற்றம் செய்யாமல் அடுப்படி சாமான்கள், தட்டு, வாலி, ப்ளாஸ்டிக் டப்பா  என நம் கல்வி நிறுவனங்கள் இந்த விசயத்தில் பழங்காலத்திலேயே இருக்கின்றனர். (இதே விலையிலோ அல்லது சிறிது கூடுதலாகவோ தரமான, இக்காலத்திற்கு ஏற்றார்போல மாணவ, மாணவிகளுக்கு உபயோகமான வகையில் பல பொருட்கள் சந்தையில் விறபனையாகின்றன)

இவ்வாறு தரமற்ற பரிசுப் பொருட்களைப் பெற்று விரக்தி அடைந்து சில மாணவர்கள் தம் பெற்றோர்களிடம் வாய்விட்டுச் சொல்லி ஆதங்கப் பட்டதோடு, பல போட்டிகளுக்கு அவர்களை தயார் படுத்தி, ஊக்கப்படுத்திய பெற்றோர்களும் விரக்தி அடைந்துள்ளதை சமீபத்தில் காண முடிந்தது.

இதனால் சில பெற்றோர்கள் இந்த தரமற்ற தட்டுக்காகத்தான் இவர்களை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி தயார் செய்தோமா? இனி அதெல்லாம் வேண்டாம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்  போதும், இனி எந்த போட்டியும் வேண்டாம், என விரக்தியின் எல்லைக்குச் சென்று அவர்களின் ஆர்வம் குறைந்துள்ளமையைக் காண முடிகிறது. 

காலச் சூழலுக்கு ஏற்றார்போலவும், கல்வித் தரத்திற்கு ஏற்றார்போலவும், கல்வி நிறுவனங்களின் தரம் ஆகியவற்றைப் பொருத்து கல்விக் கடடணங்களை உயர்த்தியுள்ள கல்வி நிறுவனங்கள், அவர்கள் நடத்தும் விளையாட்டு, கலை, இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்ப்படும் பரிசுப் பொருட்களின் தரத்தை இனி வரும் காலங்களிலாவது, மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் உயர்த்த வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும்.

இதனை கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஏதோ ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. வெளியில் சொல்ல சங்கடப்படும் பல மாணவர்கள், பெற்றோர்களின் ஆதங்கம்.

இப்படிக்கு

அஹமது ரிலா

Saturday, 1 February 2014

எப்போப்ப்பா தருவீங்க?

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆளும் அதிமுக முனைப்பாக செயல்பட தொடங்கியுள்ளது இந்நிலையில் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள ஊர்களுக்கு 
விலையில்லா மிக்ஷி ,கிரைண்டர் ,மின்விசிறி போன்றவற்றை வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது....


நமதூருக்கு மிக்ஷி கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவார்களா இல்லை வசதியற்ற ஊர் என்று  ஓரம் தட்டிவிடுவாகளா .....  


நமதூருக்கு மருத்துவனை மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்னாச்சின்னு என்னிடம் மட்டும் கேட்காகதிங்க ......