widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Saturday, 25 January 2014

லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகிகள் இதனை கவணிப்பார்களா....!!

லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகிகள் இதனை கவணிப்பார்களா....!!


லால்பேட்டை பேரூராட்சியின் கீழ் 15 வார்டுகள் அமைந்துள்ளன.பாரம்பரிய மிக்க லால்பேட்டையில் சுமார் 50,000 ஆயிரத்துக்கும் மக்கள் வசித்து வருகின்றனர்.அண்மைக்காலமாக புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன...


நகரின் பெரும்பாலான தெருக்களின் பெயர்கள் அங்கு நீண்ட காலமாக குடியிருந்து வருபவர்களுக்கு தெரியும் என்ற போதிலும், புதிதாக நம் ஊருக்கு வருபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள்,பள்ளிகள்,ஏன் வரலாற்று சிறப்பு மிக்க மத்ரஸா செல்லும் வழிகள் தெரிய வாய்ப்பு கிடையாது...

ஊரில் பல பல தெருக்கள் பகுதிகள்,நகர்கள் உருவாகிவிட்டன...அதனை முறையான பெயரில் அழைப்பது கிடையாது...

மக்களே சிந்தியுங்கள்...!!

இப்பலகையால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டின் முகவரி / வீட்டு தீர்வை ரசீது / குடிநீர் வரி ரசீது / பிறப்பு / இறப்பு சான்றிதல் பெறுதல் / பாஸ்போர்ட் க்கு முகவரி அளித்தல் / பள்ளி - கல்லூரி சான்றிதல் பெறுதல் இப்படி பல ஆவணங்கள் பெறும் போது பல சிக்கல் (இப்போது அல்ல பிற்க்காலத்தில்) கண்டிப்பாக ஏற்பட வாய்ப்புள்ளது...நாளை தெரு பெயர் திருத்ததிற்குஅழைய போவது அத்தெருவிலுள்ள மக்களே...
ஆகையால் அரசு ஆவணத்தில் என்ன பெயர் உள்ளது அதை கவனமாக பேரூராட்சியில் கேட்டு தெரிந்து நகர்மன்றம் தரும் அப்பெயரில் விண்ணப்பம் பூர்த்தி செய்வது அனைவருக்கும் நல்லது...

தெருக்களில் பெயர் பலகைகள் வைப்பதற்கு உண்டான முயற்ச்சிகளை நமது பேரூராட்சி நிர்வாகிகள் கூடும் நகர்மன்ற கூட்டத்தில் ஆலோசிப்பார்கள் என இதன் மூலம் என்னுகிறேன்...


-உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்...

No comments: