அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
இஸ்லாம் இன்று உலகில் ஒரு பிரச்சனைக்குரிய , சர்ச்சைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. காரணம் அதன் தூய வழிமுறையும், நெறிமுறையும் கொண்ட கொள்கைகளே. இன்றைய கால உலகில், சித்தாந்த, வேதாந்த, தத்துவார்ந்த கொள்கைகள் ஏட்டிலும், நடைமுறைகளிலும்; பொதிந்தும், நடமாடியும் கொண்டுதான் உள்ளன. அப்படி இந்த கொள்கைகளுக்கு தோன்றாத எதிர்ப்பு இஸ்லாத்திற்க்கு மட்டும் ஏன் ?
1400—ஆண்டுகளுக்கு முன்பு மறுமலர்ச்சி பெற்ற இஸ்லாம் அன்று எத்தனை எதிர்ப்புகளை சந்தித்ததோ, அத்தனைக்கும் சிறிதும் குறைவின்றி சொல்லப் போனால் அதை விட அதிகமாகவே இன்றைய தினம் எதிர்ப்புகளையும், பிரச்சனைகளையும் சுமந்து கொண்டுள்ளது.
“மக்களிடையே உள்ள மூடப் பழக்கத்தை ஒழித்து; தீண்டாமையை அகற்றி; பிறப்பால், நிறத்தாள் ஏற்றத் தாழ்வுகளை போக்கி; ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்தையும் எதிர்த்தும்; மனிதனை மனிதன் வழிபடுவதை உதறி தள்ளி; சாந்தியையும், சமாதானத்தையும் உலகில் பரப்பியும்; ஏக இறைவனுக்கு மட்டும் வழிபட்டு நடக்கும்; இப்படிப்பட்ட ஒரு தெளிவான, பிரதாண, உண்மையான கொள்கைகளே இதற்கெல்லாம் காரணம். இதனாலயே, தீனுல்-இஸ்லாத்தை நோக்கி மக்கள் ஆதரவு பெருகி, விரிவடைந்து கொண்டே உள்ளது.
மேற்கூறியது, ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கும் சதி வேளைகளில் ஒன்றைப் பற்றி குறிப்பிடவே இந்த கட்டுரை………………….
முன்னொறு காலம் குதிரைப் படையும், காலாட் படையும் மிகுதி கொண்டிருத்தலே ஒரு அணியின் (அ) ஒரு கூட்டத்தின் வெற்றிக்கு வழி. இஸ்லாம் மறுமலர்ச்சி பெற்ற போது, நாம் இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று, நம்மை, நம் சமூகத்தை காக்க முன் கூறிய போர் யுக்தியை கையாண்டு வெற்றிகளை குவித்தோம். ஆனால், சியோனிஸமும், மிஸனரிகளும், நம்முடன் நடத்திய ‘சிலுவைப் போர்களில்’ வெற்றி காணது போகவே அவர்கள், முஸ்லீம்களை வாள் முனையில் சந்தித்து வெல்வது இயலாது என்று உணர்ந்து சதி வேலைகளில் ஈடுபடலாயினர்.
“கலாச்சார சீரழிவு, பிரித்தாழும் சூழ்ச்சி, பிரிவினைவாதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், பின்பு தீவிரவாதிகள் என தொடர் முதுகிற்கு பின் குத்தும் சூழ்ச்சிகளில் ஈடுபடலாயினர். ஆனால், இந்த போர் யுக்திகளை கைக்கொண்டு முறியடிக்கும் ஒரு ஆயுதம் பற்றி அறியாமல் நாம் இன்று நிராயுதபாணிகளாக நிற்கின்றோம்..
ஒரு புறம் நாம் அவர்களின், பல்வேறு சூழ்ச்சிகளையும், சதிகளையும் அறிந்து ஓரளவு விழிப்புணர்வு பெற்றுள்ளோம். சமீப காலங்களில் நாம் பெற்றுள்ள அரசியல் விழிப்புணர்வும், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு போராட்டங்களும், அவற்றுள் பிரதானமானவை. ஆனால் இவைகள் வெறும் காலாட்படைகளே, போருக்கு தேவை, ஆயுதப்படையும் என்பதை நாம் அறிந்தும், அவற்றை சரிவர பிரயோகிக்க அறியாமை கொண்டுள்ளோம். ஆம் அப்படிபட்ட ஒரு அதிநுட்ப சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம்தான் ஊடகம்.
“ஊடகம் ஒரு பலம் பொருந்திய ஆயுதம்”. இப்படி ஒரு ஆயுதம் இருப்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால், அதுகுறித்து, போதிய விழிப்புணர்வுகள் இல்லை. நம் சமூகத்தில் இன்று, மாத இதழ்கள் உண்டு, பிரசுரங்கள் உண்டு. ஆனால் நாழிதழ்கள் ஏன் இல்லை ? இன்று இந்தியாவில் உள்ள, அனைத்து முன்னனி நாழிதழ்களும் யார் கரங்களில் இயங்குகின்றன ? ஆக நாம் இன்றுவரை இதனை கை கொள்ளாத அவலம் ஏன்?
நம்மில் இன்று பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் என்று, கனிசமானவர்கள் இருந்தாலும் அதன், அவர்களின் கருத்துக்களை அனைத்து சமூதாய மக்களும் அறிய ஒரு இணைப்பு பாலமாக விளங்கும் பத்திரிக்கையாளர்கள் நம்மில் எங்கே ? இல்லை என்பதே வேதனையான உண்மை.
மேலும், நம்மிடம் ஒலி,ஒளி ஊடகம் உண்டுதான் ஆனால் என்ன பயன் ? அவைகளெல்லாம், ஆவணப் படங்களாகவும், குறும்படங்களாகவும் மட்டுமே இன்று வரை. அவைகள் வெள்ளித் திரையாக, சினிமாவாக பரிணமிக்கதா வரையில், வெற்றி எட்டாக் கனியே.
இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மற்றுமொரு பெயர், வன்முறையாளார்கள். ஆனால், உண்மை வன்முறையாளார்கள் யார் ? மகாத்மா. காந்தியை கொன்றது யார் ? பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் என்பது உலகமறிந்த உண்மை இருப்பினும் அது திரை மறைவு செய்யப்படுவது பத்திரிக்கை வாயிலாகவும், சினிமாக்கள் வாயிலாகவும்தான்..
மேலும், 1990-களின் தொடக்க முதலில் நமக்கு அளிக்கப்பட்டு இன்று வரை நீளும் பெயர்தான் தீவிரவாதம்; தீவிரவாதிகள் என்பது. ஆனால் இதிலும் உள்ள உண்மைகளென்ன ? நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
· பாபரி மஸ்ஜிதை இடித்தது யார் ?
· மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு போன்றவைகள் யாரால் நிகழ்த்தப்பட்டது ?
· பழனி பாபா படு கொலை, ஹேமந்த் கர்கரே படு கொலைகள் யாரால் நிகழ்த்தப்பட்டது ?
· குஜராத் இனப் படு கொலைகள், மும்பை தாக்குதல் யார் செய்தவை ?
நம் இந்திய தேசத்தில் தொடரும் அபாயகர, அசம்பாவிதங்கள் நிகழ்த்தப்படுவது யாரால் ? தெள்ளத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் தான் என்று சம்பந்தப்பட்ட அந்தந்த வழக்குகளில் கைதானவர்கள் தரும் வாக்கு மூலங்கலே சான்று. ஆனால் நாழிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தோன்றும் பிம்பமோ; “தாடி வைத்த, அரபு பெயர் கொண்ட, இஸ்லாமிய தோற்றத்துடன் கூடிய ஒரு வாலிபராக இருப்பார். இப்படி பட்ட செய்திகளை காணும் நம்மில் பலரும் கூட இதனை நம்பிவிடுவது பரவலாக காணப்படுகின்றது.
மேலும், உலகளவில்; அமெரிக்க, இஸ்ரேலிய ஏகதியபத்திகளின் கொடூர, காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு இஸ்லாமிய நாடுகளே அழிவுறுகின்றன. ஆனால் ஊடகங்களோ அவைகளை நேர்மறையாக வெளியிட்டு கொண்டுள்ளன.
இப்படி இவர்கள் நம்மை அழித்தொழிக்க எடுத்த கருவிகள் ஏராளம். அதில் பத்திரிக்கை ஊடகமும், சினிமா ஊடகமும் மிக முக்கிய பங்கு கொள்கின்றன.
1990-களில் தீவிரவாத முத்திரையிட்டு அதனை 1992-ல் மக்களுக்கு சினிமா வடிவில் திணித்தனர் சங்க பரிவார்கள்.
1992-ல் நமக்கு எதிராக, மணிரத்னம் இயக்கத்தில், ‘ரோஜா’ எனும் இதழ்கள் அற்ற முட்கள் நம்மை குத்தலாயின. பின்பு அதுவே ‘பம்பாய்’ என பரிணமித்தது. அதன்பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து; விஜயகாந்தின் படங்களும்; கமலஹாசனின் படங்களும்; என்று தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வந்த நாம், அது ‘துப்பாக்கியாக’ வெடித்த பின்புதான், தெருவிற்க்கு வந்து போராடியுள்ளோம். ஆக வெள்ளித் திரை இப்படியிருக்க. சின்னத் திரை இன்னொரு வகையில் தன் பங்கை ஆற்றுகின்றது. “ஓம் நமச்சிவாயம், ஜெய்-ஹனுமான், ௶-ராம், மகா-பாரதம், கிருஷ்ணன் என நீளுகின்றது இதன் நச்சு பட்டியல்கள். இவை இளம் இஸ்லாமிய இதயத்திற்க்குள் மிகப் பெரும் நச்சை இதன் வாயிலாக தூவுகின்றனர். மேலும், பெண்களை கவரும் வகையில் எத்தனை, எத்தனை நாடகங்கள்;
இன்று மஹ்ரிபுடைய வேளைகளில், புனித குரான் ஓசை கேட்க்கும் வீடுகள் எத்தனை ? அவைகள் என்கே போயின ? சன் டிவி, ஜெயா, ராஜ், ஜீ, விஜய் டிவி-களென விஸ்திரமடைகின்றது பெண்களின் வாழ்வு இன்று.
இதில் பொதிந்துள்ள சூழ்ச்சிகளை நாம் உண்ர்ந்ததுண்டா ? கலாச்சாரா சீரழிவு, நேர வீண் விரையம், தக்வா, ஈமான் அறுப்பு; குடும்ப பிரச்சனைகள் இன்னும் எத்தனை எத்தனையோ………………இதிலிருந்து அவர்களை காக்க என்றாவது நாம் சிந்தது உண்டா? அதுவே, ரமலான் ஒரு மாத காலம் அவர்களின் நிலையை நாம் ஆராய்ந்தால் புரியும் நமக்கு சினிமா-வின் தாக்கம் எப்படி என்று.
மேலும், நம்முடைய முன்னோர்கள், வீர தியாகிகளெல்லாம்; கொள்ளையர்களாகவும், கோழையர்களாகவும், அரக்கர்களாகவும், காட்டப்படுவதும் இந்த சின்னத்திரை வாயிலாகத்தான், என்பதை நாம் உண்ர்ந்தோமில்லை. இராமன் வரலாற்றை உண்மையெனவும், திப்பு சுல்தான் வரலாற்றை கற்பனை கதைகள் எனவும் ஒளி பரப்புகின்றன இந்த சின்னத்திரைகள். ஆக இப்படியாக நீண்டு, தொடர்கின்றது இவர்களின் இத்துறை சார்ந்த சதிகள்.
ஆக இவைகளை நாம் எப்படி களைப்பது ? நாம்தான் தேசியவாதிகள் என்று பரைசாட்டி நிரூபனம் புரிவது ? நம் முன்னோர்களின் தியாகத்தை எப்படி வெளிக்கொணர்வது ? நமக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் இட-ஒதிக்கீட்டை எப்படி பெறுவது ? இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை எப்படி மீண்டும் கட்டி எழுப்புவது ? நம் மீது சுமத்தப்பட்டுள்ள உலகளாவிய தீவிரவாத முத்திரையை எப்படி நீக்குவது ? ஃப்லஸ்தீன், ஈராக், ஆஃப்கானிஸ்தான், சிரியா என நீளூம் சியோனிஸ ஆக்கிரமைப்பை எப்படி விடுவிப்பது ? என்பன போன்ற நம் சமூக முன்னேற்ற சிந்தனைகள் நம்முள் வளர வேண்டும். அதற்கு நமக்குத் தேவை அரசியல் தளம். அந்த அரசியலில் வென்றெடுக்க, பிரதாண, அதி முக்கிய தேவை ஊடகம், அதன் பலம் பொருன்திய கருவியான சினிமா.
இன்று நாம் அரசியலில் ஒரு தெளிவு பெற்றுள்ளோம். பத்திரிக்கை ஊடகத்தில் ஒரு தெளிவு பெற்றுள்ளோம். சமீபத்தில் இஸ்லாமிய அறிங்கர்களால், 2014-ல் ஒரு ஆங்கில நாழிதழ் நமக்கு தேவையென முழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் வரவேற்க்கத்தக்கது. ஆனாலும், நாம் சியோனிஸ, ஃபாஸிச கும்பல்களின் நவீன வளர்ச்சியில், 20-வருட பின்னடைவிலே உள்ளோம். அது மாற வேண்டும். எப்படி ஜனநாயகம் ஷிர்க் என்று ஒதுக்கி பின் தெளிவு பெற்று அரசியல் அடித்தளம் “காயிதே மில்லத்” அவர்களால் விதைக்கப்பட்டு, இன்று நாம் செயல்படுகின்றோமோ, அதுபோல, நாம் சினிமா ஹராமா? ஹலாலா ? என்ற நச்சு விவாதத்தை தவிர்த்து அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்பட வேண்டும்.
எப்படி, இராமன்; கிருஷ்ணன் என்று சின்னத்திரை வலம் வருகின்றதோ…. அவைபோல் நாமும், பாபர் ; திப்பு ; மருதநாயகம் ; பகதூர் ஷா ; என நம் முன்னோர்களின் தியாகத்தை வெளிக்கொணர வேண்டும்.
ரோஜா முதல் துப்பாக்கி வரை இறுதியாக்கி; இனி, நாம் கருத்துள்ள, ஷரீ-அத் வறையரைக்குட்பட்டு, ஆபாசமற்று, ஆடல், பாடல், கூத்தற்று, நல் இஸ்லாமிய சினிமாக்களை வார்த்தெடுக்க வேண்டும். நம்முடைய தேசியவாதத்தை நாம் திரையிட வேண்டும்.
நமக்கு சினிமா தயாரிக்க தடையாக உள்ள ஒன்று. நாம் இப்படி பயணித்தால், அதற்க்குள் வேறொரூ பிரம்மாண்ட கருவியை எதிரிகள் கை கொண்டே இருப்பர்கள்.
ஆக, திப்பு சுல்தான் எப்படி ஆங்கிலேயனை விரட்ட, ‘பீரங்கி’ என்ற ஒன்றை பிரயோகித்து, திக்கு;முக்காட வைத்தாரோ, அவரைப்போல நாம் திகழ வேண்டும்.
சினிமா பொதுப்படையில் ஹராம் தான் ; என ஒதுக்கியதால்தான் ஹராமிற்க்கு, ஹேராம் சவால் விடுத்தை மறந்து விட்டோம் போலும்.
சினிமாவை மிக நுட்பமாக ஆராய்ந்தால் அதன் இன்றைய கால அவசியம் புரியும். இவைகளை தெளிவுபெற ஆராய்ட்ந்து, இஸ்லாமிய, மார்க்க மேதைகள், ‘ஃப்த்வாக்களை’ இதுகுறித்து வழங்க வேண்டும். அரசியலை சாக்கடையாக, ஜனநாயகம் ஷிர்க்காக, ஒதுக்கினோம். பின் அதன் அவசியம் அறிந்து, தெளிவு பெற்றோம்.
ஆக நம் நிலை மாற, இழந்ததை மீட்க, இருப்பதை பாது காக்க, சினிமா என்னுமொரு ஆயுதம் அவசியமே.
:உமர் முக்தார்; தி-மெஸேச்சர்; உள்ளிட்ட திரைப் படங்கள் இதற்க்கு, ஓர் உன்னத உதாரனம். மேலும் ஈரானிய சினிமாக்கள் ஒரு உதாரனம். எனவே நான் இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த கருவியை எடுத்தாழ வேண்டும்.
Ø எப்படி; கவிதைக்கு, கவிதை ஜிஹாத் எனும் பாணியில், புனித திரு-குரான் நமக்கு அருளப்பெற்றதோ, அது போல அவலம் மிகுந்த சினிமாவிற்கு, நல் சினிமா ஒரு நவீன கால ஜிஹாத் ஆகும், என்பதை நாம் உணர வேண்டும்.
இறுதியாக இது ஒரு போர் வாள் சந்தேகமில்லை.
v அல்லாஹ்வின் வார்த்தை உயர வேண்டும், அதுதான் நோக்கமேயன்றி வேறில்லை.
வஸ்ஸலாம்……………
-நேசமுடன்
அஹமது ரிலா
லால்பேட்டை