widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Saturday, 18 May 2013

எங்கள் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் 150-வது ஆண்டு விழா...........!!


எங்கள் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் 150-வது ஆண்டு விழா...........!!

கடலூர் மாவட்டத்தில் 240 ஆண்டுக்கு முன் முஸ்லிம் மன்னர் உருவாக்கிய சமத்துவ புரத்தை காண ஓர் அரிய வாய்ப்பு….!!!

சரித்திரத்தில் சாதனை செய்த சன்மார்கத் தொண்டர்கள் தோன்றிய லால்பேட்டையை இங்கே அறிமுகம் செய்கிறோம். அல்லாஹ்வின் நாமம் கூறி அல்ஹம்தின் புகழும் கூறி அழைக்கிறோம் வாருங்கள் படித்தறிவோம்.

நவாப்புகளின் பொற்கால ஆட்சியில் தம் சிறந்த முத்திரைபதித்த வித்தகர்களாம் ஆற்காட்டு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து மக்களின் உணர்வுகளை உரமாய், விழுதாய் எடுத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த ஜனாப் ‘அன்வருத்தீன், அவர்களின்அமைச்சரவையில் “லால்கான்,,எனும் பெறற்கரிய செல்வ மகனின் கடைகண் பார்வையில் பட்டதுதான் இந்த லால்பேட்டையாகும் இவ்வூரை நிர்மானித்த பெருமை இவரையே சாரும்.

மிகச்சிலரே சொற்பமாய் எங்கெங்கோ வாழ்ந்து வந்த சின்னஞ்சிறு கிராமமாய் இவ்வூர் இருந்தது என்றும், லால்கான் வரவுக்கு முன்னாள் ஊரே இல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் லால்கான் வரவுக்கு பின்புதான் ஊரின் வளர்ச்சி களை கட்டத்துவங்கி உள்ளது என்பதைபுரிய முடிகிறது.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு “கான் இருப்பு,, எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்ரும்“காங்கிருப்பு,, என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டுவந்துள்ள வாய்காலுக்குகூட “கான் வாய்கால்,, என இன்று வரை அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு,என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் அவர்கள் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார்,

இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது. அவர்களின் இஸ்லாமிய வாழ்வு இங்கே தழைக்க ஆரம்பித்தது. இப்பகுதிக்கு வித்திட்டு வளர வைத்த அந்த மாபெரும் மனிதரான லால்கானின் பெயரே இன்றுவரை நின்று நிலவுகிறது.

அத்துடன் பாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரையோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்.

இப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லீம்களும் வீராணப்பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டுஅவர்களின் வாழ்வுக்கான தேவைகளும் லால்கானால் நிவர்த்திக்கப்பட்டு வளர ஆரம்பித்த இந்த லால்பேட்டை இன்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றி தன்படர்ந்த கொப்புக் கிளைகளை நாற் புறமும்விரித்து ஒரு நகர பேரூராய் வளர்ந்துள்ளது அல்ஹம்துலில்லஹ்.

மத நல்லிணக்கத்தின் மறு பெயருக்கு உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ம் ஆண்டுக்கு முன்பு லால்கான் உருவாக்கிய சமத்துவபுரம்.அப்போது இங்கு சொற்ப குடும்பங்களே இருந்தன இன்று மாட மாளிகை என ஆயிரக்கணக்கான வீடுகள் பிரம்மாண்டமாய் 12 அழகிய இறை இல்லம், உலகத்திற்கு உலமாக்களை வாரி வழங்கும் ஜாமிஆமன்வபுல் அன்வார் அரபுக்கல்லூரி. இக்கல்லூரிக்கு வயது 150 இதன் விழா வரும் ஜூன் 22.23. ஆகிய தேதிகளில் நிகழவிருக்கிறது.சமுதாயத் தலைவர்கள் மட்டுமின்றி சமயத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் சமய நல்லிணக்கவிழா. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வருகைதரும் சன்மார்க்க அரிஞர்கள் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழா, ஜாமிஆவின் 150 ஆண்டு வறலாற்று பொக்கிஷ மலர் வெளியீட்டு விழா, நினைவு சின்னங்களின் அற்பணிப்பு விழா என்று லால்பேட்டை விழா கோலம் காணப் போகும் அரிய வய்ப்பை காண இன்னும் சில மாதங்களே உள்ளன இவ்விழாவை காணவாருங்கள் வாருங்கள் வாருங்கள்….!

தொடர்புக்கு:மதரஸா:04144-269079
——————————–
மவ்லானா அல்ஹாபிழ்M. முஹம்மது காஸிம் ஹள்ரத்{பேராசிரியர் J.M.A. அரபுக்கல்லூரி}லால்பேட்டை CELL -9042547765, 9894302989
————————————————————
–மவ்லானா அல்ஹாஜ்J. ஜாகிர் ஹூஸைன் ஹள்ரத்{பேராசிரியர் J.M.A. அரபுக்கல்லூரி}லால்பேட்டை CELL -9442669133







No comments: