widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Thursday, 23 May 2013

நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?

நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?

மத்தியில் மார்க்க கல்வி மீதானமோகம் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரசிதிப்பு பெற்ற மதராசாக்கலான வேலூர் பாக்கியதுஸ் சாலிஹாத், லால்பேட்டை மன்பவுல் அன்வார், நீடூர் மிஸ்பாகுல் ஹுதா போன்ற மதுரசாக்களின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழே ‘கால் கொயர்’ நோட்டு அளவிற்கு இருக்கும்…ஆனால் தற்போது அம்மதுராசாக்களின் மாணவர்களின் எண்ணிக்கையே ஐம்பதிலிருந
்து – எழுபத்தி ஐந்திற்கு உள்ளாக தான் இருக்கின்றன…ஒரு சில மதுரசாக்கள் இழுத்து மூடும் நிலையில் இருக்கின்றன…

இப்படியே போனால், தொழுகை நடத்ததமிழ்நாட்டில் இமாம்கள் கிடைப்பது அரிதாகிவிடும்? இதற்க்கு என்ன காரணம்…? நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?

இதற்க்கு என்ன காரணம்…? நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் உலமாக்கள் நிறைந்து இருப்பார்கள்… காலையிலும் மாலையிலும் சிறு பிள்ளைகளுக்கான மக்தப் மதுரசாக்கள் நடக்கும்…

எங்கள் ஊரை (ஆயங்குடி) பொறுத்தவரை, பள்ளிகளில் மூன்றுபிரிவாக மக்தப் வகுப்புகள் நடக்கும்… 1 . எஸ்லன் குரான் (இது அரபி மொழியின் ‘அல்ஃப பெட்’ கற்பிக்கும் வகுப்பு,

2 . அல்ஹம்து (இது தொழுகைக்கு தேவையான குறைந்தபட்ச சின்ன சூராக்களை கற்பிக்கும் வகுப்பு

3 . குரான் (குரானை எளியநடையில், குறைந்த பட்ச இலக்கணத்துடன் கற்பிக்கும் வகுப்பு)…

ஒரு குழந்தை எஸ்லன் குரான் தொடங்க வரும் போதோ, அல்ஹம்து ஓததொடங்கும் போதோ, குரான் ஓத தொடங்கும் போதோ மற்ற பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கி ( எங்கள் ஊரில் பட்டாணி கல்லையில் சக்கரையை கலந்து கொடுத்து) தொடங்குவார்கள்… நறுமனத்திற்காக கையிலும் கழுத்திலும் சந்தனத்தை தேய்த்து விடுவார்கள்… இப்போது அந்த கலாச்சாரமே கரைந்துவிட்டது… வெள்ளி இரவுகளில் ‘ராதீப்’ நடக்கும்… பொட்டு கல்லை கொடுப்பார்கள்… ஊரில் இப்போது ‘ராதீபும்’ இல்லை…

லால்பேட்டையை பொறுத்த வரையில்மாலை நேரங்களில் ஸ்கூல் முடித்துவிட்டு வரும் பிள்ளைகள், பள்ளி சீருடையை களைந்துவிட்டு கைலியும், முழுக்கை சட்டையும், தொப்பியுமாக திரிவார்கள்… 20 வருடங்களுக்கு முன்பிருந்த லால்பேட்டை சிறுபிள்ளைகளிடம் ‘ரஜினி’ என்றால், ‘அந்த ஊர் எங்கு இருக்கிறது?’ என்று கேட்பார்கள்… அங்கு இருக்கும்,உலக பிரசிதிப்பு பெற்ற மதரசாவின் பட்டமளிப்பு விழா நடக்கும் சமயங்களில், அவ்வூரில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு திருவிழா போல் கொண்டாடுவார்கள்… எங்கே போனது இந்த கலாச்சாரமும், விருந்தோம்பல் பண்பும்?

லால்பேட்டையில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களை கணக்கிட்டால், எப்படியும் 40 சதவிகிதத்தினராவது உலமாக்களாகஇருப்பார்கள்? இப்போதைய இளவட்டத்தை கணக்கிட்டால், 100-க்கு 3-வர் இருப்பதே சந்தேகம் என தோன்றுகிறது? இந்த தேய்மானத்திற்கு என்ன காரணம்?

என் மனதில்படுவது இரண்டு காரணங்கள் தான்… ஒன்று டிஷ் - கேபுள்… இன்னொன்று தற்போது மதுரசாக்களில் கற்பிக்கப்படும் பாடமுறை…

நமது சமுதாய பெண்மணிகள் வீட்டோடு ஒன்றி இருப்பவர்கள்… அவர்கள் வெளியில் கிளம்புவது அரிது… நாமும் டிஷ்ஷை வாங்கி வைத்துவிடுகிறோம்… சமைக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் சினிமாவும் சீரியலுமாக நேரம் கழிகிறது. எல்கேஜி படிக்கும் பிள்ளைக்கு உணவு ஊட்டும் போது கூட கண்கள் சீரியலை தான் பார்கின்றன… அம்மாக்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் போது, உணவை மட்டும் ஊட்டாமல் சீரியலில் காட்டப்படும் ‘டேஞ்சரான’ கலாச்சாரத்தையும் ஊட்டிவிடுகிறார்கள்… பிள்ளைகளும் வளர்கின்றன, தகப்பனிடம் செல்போன் வாங்கி கேட்கிறது.. அவரும் வாங்கி கொடுத்து விடுகிறார்… பிள்ளைகள் யார்யாரிடமோ பேசுகிறது… என்னென்ன பழக்கமோ வந்து தொலைந்து விடுகிறது…

பிறகு எப்படி மார்க்க பற்று இருக்கும்…? எனக்கு தெரிந்த வரையில் லால்பெட்டையிலும், ஆயங்குடியிலும் டிஷ்- வைப்பதற்கு ஊர் கட்டுப்பாடு இருந்தவரை – ஊர் நன்றாக தான் இருந்தது…

மதரசாக்களில் கற்பிக்கப்படும் கல்வி முறையில் மாற்றம் தேவை… மசாயீல் சம்பந்தமான மாற்றம் தேவை அல்லது தேவை இல்லை என்று சொல்லி என் அறிவிற்கு அப்பாற்பட்ட விவாதத்தில் இறங்கிட நான் விரும்பவில்லை… மதரசாக்களில் மசாயீல் பாடதிட்டங்களோடு கைத்தொழில் பயிற்சி, கணினி வகுப்புகள், ஆங்கில பயிற்சி, பேச்சாற்றல்-எழுத்தாற்றல்களை வளர்க்கும் பயிற்ச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கற்பிக்க வேண்டும்… ஆயிரம் வணக்கஸ்தர்களை விட ஒரு விவேகமான மார்க்க ஞானி மேலானவர் – என்பது நபி மொழியாம்… அதற்கேற்றவாறு நமது மதரசா மாணவர்களை அறிவிலும், அறிவியலிலும் கூர் தீட்ட வேண்டும்.

மசாயீல்களை மட்டுமே கற்றுக்கொண்டு பட்டம்பெற்று வெளியில் வந்தவுடன், ஏதோ ஒரு பள்ளிவாசலில் தொழவைக்க இமாமாக சேர்ந்தால் வெறுமனே 3000 சம்பளம் கொடுக்கிறார்கள்… இதை வைத்து என்ன செய்யமுடியும்…? மார்க்க கல்வி நலிவடைவதிற்கு ஜமாஅத் நிர்வாகிகளும் ஒருகாரணம்…

பணக்கரான ஜமாஅத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில், ஒரு கடையை பள்ளி இமாமிற்கு ஒதுக்கினால், கொடுக்கும் 3000 த்தோடு கடையில் வரும் வருமானத்தைய்ம் வைத்து குடும்பத்தை ஓட்டுவார்… அவரும் பணக்காரர் ஆவர்… ‘இமாம்கள் எல்லாம் தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு, ஊர் நாட்டாமைக்கு கைகட்டி தான் நிற்க வேண்டும்… அவர்கள் பொருளாதாரத்தில் நிறைவடைந்துவிடக்கூடாது’ என்றுஎன்ன சட்டமா? உலமாக்களை கண்ணியப்படுத்தினால், அவர்களின் கல்விக்கு நிகரான, வேலைக்கு உண்டான சம்பளத்தை கொடுத்தால் தானே – அவர்கள் பிள்ளைகளை மதரசாவில் சேர்ப்பார்கள்… அவர்களை பார்த்து நாளு பிள்ளைகள் மதுரசாவில் சேறும்…

ஏதாவது பெரியவர்கள் புத்திமதிசொல்லும்போது, நாலு ஹதீஸ்களை எடுத்துவிட்டால் – புஹாரியில் ஆதாரம் இருக்கிறதா? என்று நம் இளசுகள் கேட்பது ஆரோக்கியம் தான்… ஆனால், அது மட்டுமே தீர்வாகாது… ஜமாஅத்தை ஒருங்கிணைக்கும் பணியில், மார்க்கக்கல்வி நலிவடைவதை தடுத்து நிறுத்தும் பணியில், மதரசா மாணவர்களின் அறிவை கூர்தீட்டும் பணியில் இளைஞகள்,முதியவர்களின்-முதிர்ந்தவர்களின் ஆதரவோடு உடனடியாக இறங்கிட வேண்டும்…

நன்றி: ஆயங்குடி நசீருத்தீன்

2011-ஜூலை-30 லால்பேட்டை எக்ஸ்ப்ரஸ் இனையதள வாயிலாக வெளியிட்ட நல்ல கருத்து....

ஈமான் கல்வி உதவித்தொகை 2013 விண்ணப்பப் படிவம் – IMAN SCHOLARSHIP 2013 APPLICATION FORM


ஈமான் கல்வி உதவித்தொகை 2013 விண்ணப்பப் படிவம் – IMAN SCHOLARSHIP 2013 APPLICATION FORM


Click here to download IMAN-APPLICATION-FORM-2013

www.imandubai.com

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா.......?

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா.......?

பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.

எப்படி திறன்களை கண்டுகொள்வது?
உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என கண்டு கொள்ளுங்கள். திடீரென்று அந்தத் துறையின் மேல் ஆர்வம் வந்திருக்கிறதா? அல்லது இயற்கையாகவே அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதா என்பதை காணவும்.
எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

பெற்றோர்கள்/ ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாமா?
உங்கள் தனித்திறமையை, அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித் திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.

அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள், கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த மாதிரியான ஆலோசகர்களை அணுகலாம்?
பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதை ஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டு அந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எது?
படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான். படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என கூற முடியாது.

ஆர்வத்துடன் படிப்பதற்கு அவசியமானவை என்ன?
மிகுந்த ஈடுபாடு.
அர்ப்பணிப்பு உணர்வு.
படிப்பின் மேல் காதல்.
புரிந்து கொள்ளும் ஆர்வம்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.

Tuesday, 21 May 2013


லால்பேட்.நெட் இல்லத்திருமணம் லால்பேட்டை 

                                        நல்லநண்பன்  வாழ்த்து 


முஹத்தஸீம்
deenmjfலால்பேட்டை.நெட் இணைய தளத்தின் ஆசிரியர் எம்.ஜெ.பத்தஹுத்தீன் அவர்களின் இளைய சகோதரர் திருமணம் இனிதே நிகழ்வுறவும் மணமக்கள் எல்லா வளமும் நலமுடன் பெற்று  வாழ மனமார வாழ்த்துகிறோம்.
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அன்புடன்..

பையாஜ் அஹமது (CAMP துபாய்)
அஹமது ரிலா B.E
J.நூருல் அமீன்ஆசிரியர் லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.

Monday, 20 May 2013

விளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்?



பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23 ஆண்டுகால இறைத்தூதர் பணியில் முஸ்லிம்களை இரண்டு அடிப்படையான நிலைப்பாடுகளில் மிக உறுதியோடு இருக்குமாறு மிக ஆழமாக திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள்.
ஒன்று – அல்லாஹ்வின் கலாம் – அல்குர்ஆன்
இரண்டு – பெருமானார் (ஸல்)அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் – ஹதீஸ்  அல்குர்ஆனையும் – ஹதீஸையும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முழுமையாகப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் உலகில் உன்னதமான மக்களாக உலகையே தன் வசப்படுத்தும் மக்களாக உலகின் போக்கையே தீர்மானிக்கும் மக்களாக உருவாவார்கள். அதன் மூலம் மரணத்திற்குப் பிறகான மறுமை வாழ்வில் பரி பூரணமான வாழ்வைப் பெறுவார்கள். அல்குர்ஆன் உலக மக்களுக்குத் தரும் உறுதிமொழி இது.
அல்லாஹ் இந்த பூமியில் இந்த உறுதி மொழியை மெய்ப்பித்துக் காண்பித்துள்ளான். உலக வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்பவர்களுக்கு அது புரியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அடுத்து வந்த சில நூற்றாண்டுகள் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் அந்தப் பரிசை பெற்று உலகின் உயர்ந்த சமூகமாக வாழ்ந்துள்ளது.
காலம் செல்லச் செல்ல அல்குர்ஆன் மீதும் ஹதீஸின் மீதும் முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய பிடிமானம் தளர்ந்த போது ஏற்பட்ட தீமைகளையும் அதனால் உண்டான விளைவுகளையும் உலக வரலாறு பதிவு செய்துள்ளது. இன்று வரையிலும் அது தொடர்கதையாக உள்ளது.
இன்றைய முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் காரணம். தனித்தன்மை வாய்ந்த அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையிலிருந்து விலகியதே !
மனம் போன போக்கில், ஊர் உலகம் போகின்ற போக்கில் வாழ்வதால் முஸ்லிம்களின் வாழ்வு அவர்களுக்கு தீமைகளை உற்பத்தி செய்கிறது. தீமைகள் பல்கிப் பெருகி தமக்கு பெரும் பின் விளைவுகள் ஏற்படுகின்ற போதும், விளைவுகள் பெருகும் போதும் அதை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் சமூகம் கூச்சலிடுகின்றது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது தொடர்கதையாக உள்ளது. சமூகத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இந்தக் காட்சியைக் காண முடியும்.
1) இஸ்லமிய சமூகக் கட்டுமானத்தின் ஆரம்ப நிலையான குழந்தை வளர்ப்பு குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் அத்தியாயம் அத்தியாயமாக கூறிய   பிறகும், பெருமானார் (ஸல்) அவர்கள் தனது குழந்தைகளையும் தனது பேரக் குழந்தைகளையும் வளர்த்து வழி காட்டிய பிறகும், நாம் அதனை பின்பற்றாமல், அதன் படி வளர்த்தெடுக்காமல் அறியாத இளம் பிஞ்சுகளை இன்றைய அதி நவீன ஷைத்தான்களான சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்ற தீமைகளில் ஊறித் திளைக்க விட்டு விட்டு அதனால் இளம் பிஞ்சுகள் சீரழிந்த பிறகு பெற்றோர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர்.
இளம் பெண்கள் அல்குர்ஆன் – ஹதீஸின் வாடையே இல்லாத வளர்ப்பினால் தறிகெட்டு தவறான தொடர்பால் ஓடிப்போகும் விளைவுகளைக் கண்ட பிறகு பெற்றோரும் சமூகமும் வேதனைப்படுகிறது. ஓடிப்போகும் விளைவுகளுக்கு என்ன தீர்வு என்பதை கூட்டம் போட்டு விவாதிக்கிறது எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், என்று தற்காலிக தீர்வுகளை நாடுகின்றனர். சில இளைஞர்கள் தவறான பாதையை தேர்வு செய்கின்றனர். விளைவு முஸ்லிம்களின் மீதும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் பிற மக்களுக்கு தவறான எண்ணம் எற்படுகிறது.
2. மனிதன் தனது வயிற்றைப் பேண வேண்டிய வழிமுறை குறித்தும் உணவையும் உண்ணும் முறைகள் குறித்தும் பெருமானார் (ஸல்) அவர்கள் பாடம் நடத்திய பிறகும் வாழ்வில் அவற்றை அலட்சியப்படுத்தும் நாம் அந்நிய உணவுகளுக்கு அடிமையாகி கவர்ச்சியான விளம்பரத்தினால் கண்ட கண்ட குப்பைகளை வாங்கி வயிற்றில் அது வெடித்து விடும் அளவுக்கு கொட்டுகிறோம். அல்சர், புற்று நோய், சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய், மூட்டு வலி, உடல் பருமன், மன நோய் இந்த “பெருமைக்குரிய நோய்ப் பட்டங்களை” வாங்காத முஸ்லிம்களே இன்று இல்லை. உழைக்கும் செல்வம், பரம்பரை சொத்துக்கள் எல்லாம் பல அடுக்குமாடி மருத்துவ முதலாளிகளின் பாக்கெட்டை நிரப்புகின்றன.
நோய்களின் பிடியில் சமூகம் சிக்கி சீரழியும் கொடும் விளைவுகள் ஏற்பட்ட பிறகே அது பற்றி விவாதிக்கிறோம். தீர்வு என்னவென்று ஏற்கனவே வெண்ணெய் போல் இருக்க அதனைத் தெரியாமல் நெய்யைத் தேடி புலம்புகிறோம். இஸ்லாம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுகிறோம். அதை அணுஅணுவாக ரசித்து வாழத்தவறிவிட்டோம். குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு என்று எல்லா நிலைகளிலும் இன்றைய முஸ்லிம்கள் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக தவறான வாழ்வியலால் விளைவுகள் ஏற்படும் போதும்  வேதனை சூழும் போதும் மட்டும் சிந்திக்கிறோம். சமூக வாழ்விலும் அரசியலிலும் இந்தப் பிற்போக்குத்தனம் தான் தொடர்கிறது.
3. இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சி அதிகாரத்தை முகலாயப் பேரரசர் ஜஹீருத்தீன் பாபருக்கு கி.பி.1526 இல் இறைவன் வழங்கினான். அடுத்தடுத்து வந்த பாபரின் வாரிசுகள் அல்லாஹ்வுடைய தீனை நிலை நாட்டும் வண்ணம் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் முகலாயப் பேரரசு அழிக்கப்படும் நிலை உருவாகி இருக்காது. “அல்லாஹ்வுடைய பாதையில் பயணிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அவர்கள் பாதை மாறாத வரை நாம்  திரும்பப் பெறுவதில்லை “. என்று அல்குர்ஆன் கூறுகிறது . முகலாய வாரிசுகளின் தவறான வளர்ப்பும் தறி கெட்ட வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை சீர் குலைத்து அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி  என்று அன்றைய முஸ்லிம்கள் அன்னியப் படையெடுப்புகளையோ, பெருகி வந்த உள் நாட்டு எதிர்ப்புகளையோ கவனிக்காமல் அலட்சியமாக வாழ்ந்தனர்.
“அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான்; என்ற அல் குர்ஆன்( 8:60.) வசனம் அலட்சியப் படுத்தப்பட்டது.
விளைவு : எதிர்ப்புகள் பெருகிப் பெருகி கி.பி. 1857 இல் முகலாய சாம்ராஜ்ஜியம் காணாமல் போனது.  பிரிட்டீஸ் ஆக்கிரமிப்பாளர்கள் எனும் வளர்ந்து விட்ட தீய விளைவுகளை கடைசி கட்டத்தில் வீழ்த்த முயன்ற முஸ்லிம் சமூகம் எவ்விதத் தகுதியும், திறனும் இல்லாமல் தன்னளவில் அறிவையும், ஆற்றலையும், மேம்படுத்தாமல் பிரிட்டனிடம் முட்டி மோதி பலியானது. இன்று வரை அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
அதுபோலவே கி.பி.711 இல் முஸ்லிம்களின் தியாகத்தால் ஸ்பெயின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அல்குர்ஆனும் – ஹதீஸும் வாழ்க்கை வழிகாட்டியாக முழுமையாக பின்பற்றப்பட்ட  போது உலகின் தலைசிறந்த பிராந்தியமாக இஸ்லாமிக் ஸ்பெயின் அல் அந்தலூசியா மாறியது.
கி.பி.1200 க்குப் பிறகு குழுச்சண்டை கோஸ்டிச்சண்டை இனப்பகை ஆகியவை பெருகிப் பெருகி அதன் கோர விளைவுகளால் ஏறக்குறைய 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் கி.பி. 1495 இல் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற அளவுக்கு இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள்.  இன்றும் அந்த அவலத்தை உலக முஸ்லிம் சமூகம் அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. அது போல பாக்தாத் அப்பாஸிய கிலாஃபத், துருக்கி உதுமானிய கிலாஃபத் என்று முஸ்லிம்களின் அலட்சிய வாழ்க்கையும், அதன் விளைவுகளும் வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி உள்ளது.
அறிவு ரீதியாகப் பார்ப்போம்.
அல் குர்ஆனிலும் – ஹதீஸிலும் செய்த ஆய்வின் காரணமாக 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அறிவுச் செல்வம் முஸ்லிம்களிடம் இருந்தது அதுவரை ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் என்ற பட்டத்தின் சொந்தக்காரர்களாக முஸ்லிம்களே இருந்தனர். இன்றைய போலியான நோபல் பரிசு போல அல்லாமல் அன்றைய உலகின் உயரிய விருதுகளை முஸ்லிம் விஞ்ஞானிகளே பெற்றனர்.
12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் அல்குர்ஆனிலும் – ஹதீஸிலும் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அது அருளப்பட்ட விதம் குறித்த வெட்டி விவாதங்களில் ஈடுபட்டனர்.  உலக இன்பங்களால் உல்லாசமடைந்தனர். இப்படி அறிவியல் தொழில் நுட்பத்தில் விஞ்சி இருந்தவர்களின் அலட்சியத்தின் காரணமாக அல்லாஹ் காற்றை திசை மாறிச் சுழலச் செய்தான். அறிவு கைமாறியது அறிவியல் – தொழில் நுட்பம் கைமாறியது. கண்டுபிடிப்பாளர்கள் என்ற மேன்மை நிலை கைமாறியது.
விளைவு : அறிவும், அறிவியலும் தொழில் நுட்பமும் ஐரோப்பியர்கள் வசமானது. அதை வைத்து உலகையே இன்று தம் வசப்படுத்தி விட்டனர். “எல்லாத்தையும் நாங்கதான் கண்டு பிடிச்சோம்“ என்ற பெருமூச்சு மற்றும் பழம்பெருமை மட்டுமே இப்போது முஸ்லிம்களிடம் மிஞ்சி இருக்கிறது.
முஸ்லிம்களிடமிருந்து  அனைத்தையும் கற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள். முஸ்லிம்கள் செய்யத் தவறியது என்ன என்பதை இப்போது நமக்கு பாடம் நடத்துகின்றனர்.  அல்குர்ஆன் – ஹதீஸின் எழுச்சி முஸ்லிம்களை உசுப்பி பழம்பெரும் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  இப்போது  மீண்டெழுந்த  கிறித்தவர்கள் மீண்டும் நவீன ரோமப் பேரரசான “ஐரோப்பிய யூனியனை” கட்டி எழுப்பியுள்ளனர். இனி ஒருமுறை இந்த நவீன ரோமப் பேரரசை யாரும் அசைத்து விடக்கூடாது என்பதற்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தீட்டி அதை கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அதே போல அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தேவையான அறிவு ஜீவிகளை உருவாக்கிடும் கல்விச்சாலைகள், ஆய்வு நிறுவனங்கள் என உலகை தன் வசப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். சமூக, அரசியல் வாழ்வில் முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகின்றனர்.
எனவே தனி மனித வாழ்வு முதல் உலகின் ஆட்சி அதிகாரம் வரை இடைவெளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட கண் அயராமல் அல்குர்ஆனையும் – ஹதீஸையும் பரிபூரணமாக முஸ்லிம் சமூகம் பின் பற்றினால் மட்டும்தான் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க முடியும். முஸ்லிம் சமூகம் அல்குர்ஆன் – ஹதீஸ் பாதையை விட்டு ஒரு இஞ்ச மாறினாலும் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். என்பதை இன்றைய நமது வாழ்வை அங்குலம் அங்குலமாக எடை போட்டால் அப்பட்டமாகத் தெரியும்

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு..........!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு..........!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு.

லால்பேட்டையில் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டம் நகர அலுவலகத்தில் 19.05.2013 அன்று இரவு நடைபெற்றது.நகர தலைவர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 2 வார்டு த.மு.மு.க.தலைவர் புஹாரி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்மாவட்ட பொருளாளர் முஹமது அய்யுப், மாவட்ட முன்னால் ம.ம.க.செயலாளர் யாசர் அரபாத் மனித நேய மக்கள் கட்சியின் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்மௌலவி அப்துல் சமது, ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முஹமது ஆசிக், நகர த.மு.மு.க செயலாளர் நூருல் அமீன், நகர ம.ம.க செயலாளர் ஆசிக் நூர், நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் மற்றும் நகர துணை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் செயர்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுதீர்மாணம்

1: 25/05/2013 அன்று சுபுஹு தொழுகை முதல் மகரிப் தொழுகை வரை மாணவர் நல்லொழுக்க பயிற்சி (தர்பிய )வகுப்புகள் நடத்துவது என்றும்தீர்மாணம்

2:26/5/2013 அன்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடத்துவது என்றும்தீர்மாணம்

3:லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வரும் கல்வி ஆண்டில் அமுல்படுத்த அரசு அறிவித்தும் காலதாமதம் ஏற்படுவதால் த.மு.மு.க.தலைமையகத்தில் ஆலோசனைகேட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மாணம் நிறைவேற்றபட்டது.


Sunday, 19 May 2013

ஓரங்களில் குறையும் பூமி

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது. 

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களின் நிலை.......!!

நல்ல நண்பன் லால்பேட்டை
கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களின் நிலை.......!!

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் கல்வியை தன் எதிர்கால வாழ்வின் பொருளாதார தேவையை சீராக்க உதவும் அகக்காரணியாக மட்டும் நினைத்து தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) , பொறியியல் பாடப்பிரிவுகளைப் படித்து மைக்ரோசாஃப்ட், விப்ரோ போன்ற நிறுவனத்தில் வேலை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

சிலர் பொருளாதாரப் பாடங்கள் (எம்.பி.ஏ), கலைப்பாடப்பிரிவுகள்,தொழிற்பயிற்சிகள் பயின்று ஏதேனும் பன்னாட்டு நிறுவனம், அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பயில்கின்றனர்.

இவரகள் தான் அடையப் போகும் அல்லது அடைந்த கல்வியின் மூலம் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும்,ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலை மற்றும் சமூக நீதி பெற்றுத் தருவதற்கும்தன் கல்வி பயன்தரும் என்று எண்ணுவதில்லை.

இதில் இளைஞர்கள் மீது மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் சமூகத் தலைமை என்று அனைவருக்கும் பொறுப்புண்டு.

கல்வியின் மூலம் அதிகாரம்:

தான் பெற்ற கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதின் உச்சத்தை அடைவதற்கு அதிகாரம் அவசியமாகிறது.

அதிகாரம் என்பது அரசின் ஆட்சிப்பணிகளான இந்திய நிர்வாக சேவை (ஐ ஏ எஸ்), இந்திய காவல் சேவை( ஐ பி எஸ்) மற்றும் இன்னபிற அரசுப்பணிகளின் மூலம் சாத்தியமாகிறது.ஆனால் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிர்ச்சியளிக்கும்வகையில் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் சதவிகிதத்தை"தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்" மூலம் கோரிய போது அரசு அளித்த பதிலின் விபரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது

தமிழக முஸ்லிம் மக்களின் மொத்த மக்கட்தொகை 8%க்கும் மேல்!

ஆனால் அரசுப்பணியில் வெறும் 1.9%பேர்தான் உள்ளனர்.

அதிலும் அதிகாரமிக்க ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பணிகளில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர்.

காவல்துறையிலும்சதவீதக்கணக்குமிக மிகக் குறைவாக உள்ளது.

கல்வித் தேடலில் அரசுப் பணியின்முக்கியத்துவம்,இன்றைய தலைமுறையினருக்கு முறையாக வழிகாட்டப்படவில்லை.

இஸ்லாமிய இளைஞன் அரசுத்துறையில் பங்கெடுக்க ஆர்வம் கொள்ளாதிருக்க முக்கிய காரணம், “ சம்பளம் குறைவு”.

அதனை விட தன் தந்தையின் வணிகத்தில் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் அதிகம் சம்பாதிக்க இயலுமென்ற பணக்கணக்கு. ஆனால் எப்போது ஒரு சமூகம் அரசுப்பணியில் தனது பங்களிப்பை சரியாக பெறத் தவறிவிடுகிறதோ அச்சமூகத்திற்கு“சமூக நீதி” என்பது ஒருபோதும் கிட்டாது.

அரசுப்பணிகளின் முக்கியத்துவம்குறித்து இஸ்லாமிய இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டியது சமூகத் தலைமை மற்றும்மார்க்க அறிஞர்களின் முதன்மைக் கடமையாகும்.

முஸ்லிம் சமூகம் மத்திய அரசுப்பணி (யுபிஎஸ்ஸி) மாநில அரசுப்பணி (டி என் பிசி) குறித்து சிறிதும் விழிப்புணர்வின்றி உள்ளது.

எனவே கல்விக்கான தேடலில் அதிகாரத்தைப் பெறுவதே முதல் இலக்கு. அதன் மூலம் மிகுதியான மக்கள் பணியாற்ற இயலும்.!

உணர்ச்சியுடன்:நல்ல நண்பன் லால்பேட்டை 

Saturday, 18 May 2013

அல் குர்ஆன் வழியில் அறிவியல்………..

அல் குர்ஆன் வழியில் அறிவியல்………..

அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான். ஆனால் அவன் காலடியில் கிடக்கும் கடலின் ஆழத்திற்கு சென்று அதன் அற்புதங்களை அறிய முடியாத நிலையிலே அவன் அறிவு இன்றும் இருக்கின்றது. ஆழ் கடல் மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

ஆறாம் நூற்றாண்டில் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக ஆழ் கடலின் இருளுக்கு ஒப்பிடுகிறான்.

“ ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” —அல் குர்ஆன். 24:40

இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நவீன அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறான். பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இவ்வலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.

ஆறாம் நுற்றாண்டில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் கூறுவது, ஆழ்கடல் அலைகளாலும்,அதற்கு மேல் மற்றொரு அலைகளாகவும் அதற்கும் மேல் மேகத்தாலும் மூடப்பட்டிருப்பதால் சூரிய ஒளி உட்புக முடியாமல் கடல் இருளாக இருக்கின்றது. ஆழ் கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பது பற்றிய அறிவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் அறிந்து கொண்டான்.

1939 ம் ஆண்டு நார்வே நாட்டைச் சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற கடல் ஆய்வாளர் நீல்சென், வடதுருவத்திற்கு செல்வதற்காக கப்பலில் புறப்பட்டார். பனிப்பாறைகள் நிரம்பிய கடற்பகுதிக்கு அவர் கப்பல் வந்தபோது மேலும் முன்னோக்கி செல்ல முடியாதவாறு கப்பல் தடுக்கப்பட்டது. அவர் கப்பலை நகர்த்த பல முயற்சிகள் செய்தும் 20% வேகத்தில் மட்டுமே நகர முடிந்தது.

காற்று ஏதுமின்றி அமைதியான கடற்பரப்பில் கப்பல் நகராதது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இதன் காரணம் பின்புதான் தெரிந்தது. கடல் நீரானது பல அடுக்கு அடர்த்தி நிலை,வெப்ப நிலை உப்புத்தன்மை மாறுபாடுகளைக் கொண்டது. பனிப்பாறைகள் ( Fiord ) உருகி நன்னீர் சேரும் மேற்பகுதி அடர்த்தி குறைவாகவும் உப்பு அதிகமுள்ள அடிப்புற நீர் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். அதிக அடர்த்தியுள்ள கீழேயுள்ள நீரானது சுவர் போன்று கப்பலை தடுக்கிறது. இதை ( Dead Water ) என்று அழைக்கின்றனர்.

ஆழ் கடலின் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை அடர்த்தி, உப்புத்தன்மைக்கு ஏற்றவாறு வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர் ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன. இவை சுமார் 100 மீட்டர் பிரமாண்ட உயரமும் ( 330 அடி) பல நூற்றுக்கணக்கான மைல் நீளத்திலும் நீண்டு செல்லும்.கடற்பரப்பில் இவ்வலைகள் கண்ணுக்கு தெரியாது.

சூரிய ஒளி கடலில் பட்டு செங்குத்தாக மேல் நோக்கி திரும்பிச் செல்வதால் ஆழ்கடல் உள் அலைகளின் பிரதி பலிப்பை (Reflected Sunlight or Sunglint) செயற்கை கோள் புகைப்படங்கள் மூலமே காண முடியும். மேலேயுள்ள புகைப்படம் கடந்த ஜனவரி 18, 2013 ல் (International Space Station) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கரீபியன் கடற்பகுதியில் எடுக்கப்பட்டது.

கடலின் மேற்பகுதியில் காற்று, மற்றும் நீர் என இரு வெவ்வேறு அடர்த்தியுள்ள ஊடகங்களுக்கு மத்தியில் மேற்புற அலை தோன்றுகிறது. கடலின் ஆழத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள திரவங்களுக்கு மத்தியில் உள் அலைகள் (Internal waves) உருவாகின்றன.

இதுபோன்ற கடலடி அலைகள் உலகின் பல்வேறு கடற்பகுதிகளில் ஆழத்தில் உருவாவதை செயற்கைக் கோள் படங்கள் தெளிவாக நமக்கு காட்டுகின்றன.

அல்லாஹ் கூறும் இரண்டாவது அறிவியல் உண்மை, கடல் நீரில் ஊடுருவும் சூரிய ஒளியானது ஆழம் செல்லச் செல்ல தடுக்கப்பட்டுவிடும். (கடலுக்குள்ளிருந்து) “அவன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” அல் குர்ஆன்.24:40. சூரியனின் வெண்மை ஒளியானது பல அலைநீளம் உள்ள வண்ணங்களின் கலவையே.

சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,நீலம்,இன்டிகோ,வயலட் அதிக அலை நீளத்திலிருந்து குறைந்த அலை நீள வண்ணங்களை வரிசைப்படுத்தி VIBGYOR என்று அழைப்பர். அதிக அலை நீளம் உள்ள சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள் போன்ற நிறங்கள்,15,30,50 மீட்டர் ஆழத்திற்குமேல் ஊடுருவாது. குறைந்த அலை நீளம் உள்ள வயலட், பச்சை, நீலம் போன்றவை இன்னும் கூடுதலாக சுமார் 200 மீட்டர் ஆழம் வரைச் செல்லும்.


கடல் இருள் மயமாவதற்ககு காரணம் சூரிய ஒளியானது முதலில் மேகத்தால் தடுக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பி வரும் ஒளியை கடலின் மேற்புற அலைகள் தடுத்து விடுகின்றன. இன்னும் ஊடுருவிச் செல்லும் ஒளிகளை இருவித அடர்த்தியால் ஊருவாகும் உள் அலைகள் (Internal Gravity Waves) தடுத்து, கடலை இருளாக்கி விடுகின்றன. சூரிய ஒளியில்,

73%————1 செ.மீ. அல்லது ½” அங்குலம் ஆழமே ஒளி ஊடுருவும்.

44.5%———-1மீட்டர் அல்லது 3.3 அடி ஆழமே செல்லும்.

22.5%———-10 மீட்டர் அல்லது 33 அடி ஆழமே செல்லும்.

0.53%———-100 மீட்டர் அல்லது 330 அடி ஆழமே செல்லும்.

0.0062%——-200 மீட்டர் அல்லது 660 அடி ஆழம் வரையில் செல்லும்.

200-300 மீட்டர் ஆழத்திற்கு கீழ் முழுக் கடலும் இருள்மயமாகவே இருக்கும். இன்று ஆழ் கடலில் ஆக்சிஜன் வாயுவுடன் (SCUBA) மூழ்கிச் செல்பவர் தன் கையை நீட்டினாலும் ஒளி இல்லாததால் பார்க்க முடியாது.

ஒளி அலைக்கும் கடல் அலைக்கும் உள்ள தொடர்பு.

அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மாஸாசூட்செட்ஸ் தொழில் நுட்ப கழகத்தின் ( MIT-Experimental and Nonlinear Dynamics Lab) ஆய்வகத்தில், பேராசிரியர் தாமஸ் பீகாக் தலைமையில் ஆழ் கடலில் எவ்வாறு உள் அலைகள் உருவாகின்றன, இதற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்தனர்.

அதன் முடிவில், “ஆழ் கடலின் உள்ளே உருவாகும் அலைகளுக்கும், ஒளி ஊடுருவி செல்வதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், ஒளியானது பல வகை அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகத்தில் (Optical interferometers) செல்லும்போது ஒளியை தடுத்தும் சில அலை நீளங்களை கடத்தவும் செய்வதுபோல் கடலில் உருவாகும் உள் அலைகளும் (Internal Waves) வெவ்வேறு அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகம் போல் செயல் படுகிறது. கடலடி அலைகளுக்கும் ஒளி ஊடுருவலுக்கும் உள்ள தொடர்பை தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.”என்று அறிவித்தார்.

More information: Paper: prl.aps.org/abstract/PRL/v104/i11/e118501 Provided byMassachusetts Institute of Technology

http://phys.org/news191657531.html

இன்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அறிவித்த கடல் உள் அலைக்கும், ஒளி அலைக்கும் இடையில் உள்ள தொடர்பு, இந்த உண்மையை அல்லாஹ் 6 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தி விட்டான்.

“….ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது; அதற்க்கு மேல் மற்றொரு அலை; அதற்குமேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்போது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” -அல் குர்ஆன்.24:40. 

கடலடி நீரின் அடர்த்தி மாறுபாட்டால் உருவாகும் உள் அலைகள், அடர்த்தி மாறுபாடுள்ள கண்ணாடி (Optical interferometer) எவ்வாறு ஒளியை தடுத்து பிரித்து விடுவதுபோல் உள் அலைகள் (Internal Waves) செயல் படுகின்றன. அலையையும், ஒளியையும் இணைத்து ஒரே வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஓர் அறிவியல் அற்புதம்.

படைத்த இறைவனை மறுக்கும் நிராகரிப்பவர்களை, அல்லாஹ் ஆழ்கடல் இருளுக்கு உவமையாக கூறுகிறான். இதன் காரணம் என்ன என்று சிந்திக்கும்போது, உலகில் மிகச்சிலரே அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மறுப்பவர்களாகவே உள்ளனர். எப்படி எனில்,

இப்பூமியில் நீர், நிலம் அனைத்திலும் உள்ள ஜீவராசிகளில் சுமார் 10% மட்டுமே சூரிய ஒளியை பெறுகின்றன. ஆழ் கடலில் வாழும் சுமார் 90% உயிரினங்கள் இருள் உலகிலே வசிக்கின்றன. ஆகவே நிராகரிக்கும் மக்களை அல்லாஹ் ஆழ் கடல் இருளுக்கு ஒப்பாக்குகின்றான். அல்லாஹ் அறிந்தவன்!

“ நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும்,தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

அல்லாஹ் இதைக்கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகின்றான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.” -அல் குர்ஆன்.5:15-17.