சில தினங்களுக்கு முன்பு MH 370 விமானத்தை பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்தேன். 'பைலட்' ஆகவேண்டுமென்று நெடுநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கும் ஏழு வயது நிரம்பிய எனது தம்பி என்னருகில் வந்தான்.
பாய் (அண்ணன்) ஃப்ளைட்டுக்கு என்ன ஆச்சி? என்றான்.
கடல்ல விளுந்துச்சான்டா அத தேடிக்கிட்டு இருக்காங்க.
அப்போ பைலட்டையும் காணோமா?
ஆமா.
சில நிமிடங்கள் ஏதோ யோசித்தான். ''நா பைலட் ஆவமாட்டேன் டாக்டர் ஆகப்போறேன்'' என்றான்.
அவன் சொன்ன விதத்தையும், முக பாவனைகளையும் நினைக்க நினைக்க சிரிப்பு தான் வருகிறது.
ஒரு காரியத்தை செய்யும் முன் குழந்தைகளும் கூட சிந்தித்து முடிவெடுக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்