widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Sunday, 24 November 2013

லால்பேட்டை மாணவன் இருசக்கர வாகன விபத்தில் கால் துண்டிப்பு! தாராளமாக உதவி செய்யுங்கள்.

லால்பேட்டை தெற்கு தெருவில் வசித்த +1 மாணவன் முஹம்மது ஜர்வீஸ் மற்றும் அவன் நண்பனோடு பைக்கில் சென்றபோது காங்கிருப்பு அருகில் 22.10.2013 அன்று பைக் விபத்துக்குள்ளானது அதில் ஜர்வீஸ் கால் மீது லாரி டயர் ஏறியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு உடனடியாக பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,தற்போது மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமக கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

முஹம்மது ஜர்விஸ் தாயார் இறந்துவிட்டார் தந்தையும் மறுமணம் செய்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். தற்போது தனது பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் ஜர்வீஸ் கூட பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் இதில் ஜர்வீஸ் தான் மூத்த பையன். வசதியற்ற குடும்பத்தை சார்ந்த இந்த மாணவனுக்காக கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடி உள்ளது இந்த குடும்பம்.
.
இவரின் மருத்துவ செலவுக்கு தாளாரமாக உதவி செய்யுங்கள்.அல்லாஹ்விடம் நிறைவான நன்மையை பெறுங்கள்.
.
MOHAMMED JARVEES
INDIAN BANK LALPET
A/C NO: 923019026
.
தொடர்புக்கு: 7639681257 – 9787108424

Saturday, 23 November 2013

செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!



சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.
ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.
சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.
விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.
எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!


                               விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.
வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.
ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

Tuesday, 19 November 2013

செல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் !


செல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் !



 பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளையும் 'கேடுகளை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் செல்போன்' கலாச்சாரத்திலிருந்து, பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், அனாச்சாரங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். இல்லை எனில் உடைந்த கண்ணாடியாக வாழ்க்கை மாறக் கூடும். இறைவன் பாதுகாப்பானாக ! 

தற்சமயம் அதிக அளவில் பெண்கள் அந்நிய ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும், விபச்சாரம் போன்ற வழி கேடுகளில் வீழ்வதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.


இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

01. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.

02. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக Mobile Phoneபோன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

03. Mobile Phoneல் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

04. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்? எப்போது வருகின்றார்கள்?? என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

05. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை ஆபாச சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.

06. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம் : வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

07. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

08. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது. அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

01. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

02. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

03. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்த வரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (Attendance) சரியாக உள்ளதா ? என வாரம் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

04. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

05.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு Mobile Phone களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். Land Line டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

06. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், ஆம்னி டிரைவர், சிட்டை வட்டிக் காரன், பால்காரன், கேபிள் டீவிக்காரன், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் Phone நம்பரை கொடுக்க வேண்டாம்.

07. தெரியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ, அல்லது Message அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டித்து விடுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற Call or Message வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

08. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ, குடும்பத்தினர் பற்றியோ, குடும்ப விசயங்கள் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் 'இது உங்களுக்கு அவசியமற்றது' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

09. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும் தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்காதீர்கள், அதுபோல் சக மாணவியரால் 'நல்லவன்' என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்து தான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட, அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும், ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி DELETE செய்து விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல், முறையான ஆபாசம் இல்லாத லூசான, தளர்வான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு தான். அதை விடுத்து டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள் வாங்கப்பட்டு புளு பிலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

நன்றி : முக நூல் நண்பன் (அறிவுரைகள்)

அந்நியருடன் ஓடிப்போகும் / ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை, காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்து விட்டு பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள் அல்லது தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறாள்.

ஓடிப்போகும் போது இவள் தனது பெற்றோரின் ஓட்டு மொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள்.

இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம் பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணை போட திட்டமிடுவீர், உங்கள் பெண் பிள்ளைகளை முறையாக ண்காணியுங்கள்.  
கண்ணாடிகள் ஜாக்கிரதை..!

                                                      -லால்பேட்டை அஹமது ரிலா

Thursday, 14 November 2013

வரலாற்றை வாசிப்போம்! வரலாறு படைப்போம்!



வரலாற்றை வாசிப்போம்வரலாறு படைப்போம்!

முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க உதவியாய் இருக்கின்ற மூன்றாவது காரணி
            மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வரலாற்றை உண்மை வடிவில் வெளிக்கொணர்வதின் மூலமேசாத்தியமாகும்.
            தனது சொந்த வரலாற்றைத் தெரிந்திடாத சமுதாயத்தை அழித்திடுவது மிகவும் எளிது என்பார்மாலிக் அல் ஷாபாஸ் எனும் பேரரிஞர்.
            ஒரு நிகழ்வு நடந்த காலத்தையும்அது பற்றிய விரிவான செய்திகளையும் எடுத்துச் சொல்வதற்கேவரலாறு’ எனப்படும்.
            இதற்கு அரபியில் “தாரீக்” என்பார்கள்
            வரலாறுகள் சொல்லப்படுவதின் நோக்கம்
            முந்திய சமுதாயத்தினர் மற்றும் நபிமார்களின் நிலைமைகள்பண்பாடுகள்விழுமியங்கள்,கலைகள்வாழ்க்கை முறைகள்உலகம் மற்றும் மார்க்கம் சம்பந்தமான அறிவுரைகளை அள்ளித்தரும்பயன்மிகு கலையே வரலாறு எனப்படும்.
நூல்தத்கிரயே ஃபுனூன் பக்கம் - 7
            இஸ்லாத்திற்கும் வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.ஏனெனில் அல்குர்ஆனில்வரலாறுகளைக் கூறும் வசனங்கள் சுமார் 1000 இடம்பெற்றிருக்கின்றன.
            அல்லாஹ் கூறுகிறான்:
            (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள்ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால்அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தைஉறுதிப்படுத்துகின்றோம்மேலும்இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைக்கின்றது.இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.
அல் குர் ஆன்: 11:120
            மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
            (நபியேமக்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராகஅதன் மூலம்அவர்களால் சிந்தித்து உரைக்கூடும்.
அல் குர் ஆன்: 7:176
மேற்கூறப்பட்ட இருவசனங்களும் வரலாற்றை ஒரு மனிதன் அறிந்து கொள்வதால் எற்படும்விளைவுகள்மாற்றங்கள் குறித்துப் பேசுவதை உணர்கிறோம்.
            எப்படியான வரலாற்றுக்கொல்லாம் சொந்தமான ஓர் சமூகம் இன்று பெருமையிழந்துகாணப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது.
            இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாக அறிஞர் பெருமக்கள் மூன்று செய்திகளைமையப்படுத்துகின்றனர்.

1.      தாத்தாரியாக்கள் படையெடுப்பு
2.      சிலுவை யுத்தங்கள்
3.      ஸ்பெயினின் வீழ்ச்சி

v தாத்தாரியாக்களின் படையெடுப்பு முஸ்லிம்களின் நிலப்பரப்பையும்தலைமைபீடத்தையும் பறித்தது.
v சிலுவை யுத்தங்கள் இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைத்தது.
v ஸ்பெயின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் கல்விவரலாறுபண்பாடுஆளுமைத்திறன்அனைத்தையும் அழித்தது.
எனவேகடந்த கால வரலாற்றை வாசிக்கும் போது எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் உத்வேகம்இந்த சமூகத்திற்கு ஏற்படும்
ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், 160 கோடி முஸ்லீம்கள் என இன்றையஇஸ்லாமியர்களின் வளர்ச்சி மிளிர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்..
இப்பெருமைக்கு வித்திட்ட நிகழ்வையும்வித்திட்டவரையும்இறை நம்பிக்கையாளர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அன்றொரு நாள்,

மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாரின் முக்கியப்பிரதிநிதிகள் 15 பேர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய தோடல்லாமல் தங்களுக்கு சன் மார்க்கத்தை கற்றுத்தரஒருவரை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு வேண்டி நின்றனர்.
            தம் அருகே அமர்ந்திருந்த நபித்தோழர்களை நன்கு உற்று நோக்கிய நபி (ஸல்அவர்கள் முஸப்இப்னு உமை (ரலிஅவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள்.
மறுவருடம் மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 80ஆகஉயர்ந்தது.முஸ் அப் இப்னு உமை (ரலிஅவர்களின் கண்ணியமும் உயர்ந்ததுதனிமையில் நபிகளாரைசந்திக்கும் வாய்ப்பை பெற்ற முஸ் அப் (ரலிஅவர்கள் இங்கிருந்து (மக்காவில் கஷ்டப்படுவைவிடமதீனாவில் வந்து ஏகத்துவப்பணியை தலை ஏற்று நடத்துமாறும்தாம் அதற்கு உறுதுணையாய்இருப்பதாகவும் கூறி மதீனாவிற்கு அழைத்தார்கள்பின்பு மதீனா சென்று அங்குள்ள பிரமுகர்களைச்சந்தித்து மாநபி (ஸல்அவர்களை மதீனாவிற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுங்கள் என முஸ் அப்(ரலிஅவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்தார்கள்.
மறு ஆண்டு மதீனாவிலிருந்து வந்திருந்தவர்களின் எண்ணிக்கை முன்பைவிட இன்னும் கூடுதலாகஇருந்தது.
அத்தோடு வந்திருந்தவர்களும்பிரமுகர்களும் மாநபி (ஸல்அவர்களை மதீனாவிற்கு வருமாறுஅழைப்புவிடுத்ததோடு மாத்திரமில்லாமல்சத்திய தீனிற்கும்மாநபி (ஸல்அவர்களுக்கும் என்னென்றும்பக்க பலமாக இருப்பதாக உடன்படிக்கையும் செய்து கொடுத்தார்கள்.அதன் பின்னர்தான் வல்லோனின்கட்டளைப்படி ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டதுமாநபி (ஸல்அவர்கள் மதீனாவில் பிரவேசமானார்கள்.
அன்றிலிருந்து தான் இஸ்லாம் தன் ஒளிப்பிரவாகத்தை உலகெங்கும் பாய்ச்சியது.
இந்த உல்கெங்கும் இஸ்லாம் தன் ஆளுமையில் வழிநடத்திட வாய்ப்பை ஏர்படுத்திக் கொடுத்தவர்முஸ் அப் இப்னு உமை (ரலிஅவர்கள்.
            நபிகளாரின் தலைமையில் பல்வேறு வெற்றிகள் இறுதியாக ஹிஜ்ரி 8 ரமலான் பிறை 20ல் மக்காவெற்றியுடன் இஸ்லாமிய ஆட்சி நபிகளாரின் தலைமையில் அமையப்பெற்றது.
ஹிஜிரி 11 ரபீயுல் அவ்வல் 12 திங்கட்கிழமை (கி.பி. 632) லுஹா நேரத்தில் மாநபி (ஸல்அவர்களின்மறைவு இஸ்லாமிய உலகை அதிர்யுறச் செய்தது.
ஹிஜ்ரி 11 ரபீயுல் அவ்வல் பிறை 13 - 17 முதல் (கி.பி. 632) ஹிஜ்ரி 40 ரமளான் பிறை 17 வரை (கி.பி.661)நேர்வழி நின்ற நான்கு கலீபாக்களின் ஆட்சியும்,
            அதன் பின்னர் அமீர் முஆவியா (ரலிஅவர்கள் தலைமையாகவும்திமிஷிக் (டமாஸ்கஸ்)கைதலைநகரமாகக் கொண்டு ஹிஜ்ரி 41 (கி.பி. 661) முதல் ஹிஜ்ரி 132 (கி.பி.750) வரை 91 வருடங்கள்உமையாக்களின் ஆட்சியும்.
            ஹிஜ்ரி 132 (கி.பி. 750) முதல் பக்தாத்தை தலை நகரமாகக் கொண்டு (முதல் கலீஃபா அபுல் அப்பாஸ்ஸ்ஃபாஹ்ஹிஜ்ரி 656 (கி.பி. 1258) வரை 524 வருடங்கள் அப்பாஸியாக்களின் ஆட்சியும் ஹிஜ்ரி 699 (கி.பி.1300) முதல் உஸ்மான் கான் காஜி தலைமையில் துவங்கப்பட்ட உஸ்மானியப் பேரரசின்ஆட்சிக்காலம் ஹிஜ்ரி 1341 (கி.பி. 1922) வரை நீடித்தது.
நூல்ஓர் உலகளாவிய வரலாறு பக்கம் 94-110
இவ்வாறு உலகெங்கும் இஸ்லாமியர்கள் ஆளுமை புரிந்ததை வரலாற்றை வாசிக்கும் போதுதெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவும்இஸ்லாமியர்களும்..
1.      ஹிஜ்ரி 15 (கி.பி.636)ம் ஆண்டில் உமர் (ரலிஅவர்களால் அனுப்பப்பட்டதளபதி ஹகம் பின் ஆஸ் (ரலி)அவர்கள் இந்தியாவின் குஜராத்தையும்புரோச்சையும் வெற்றி கொண்டார்கள்.
2.      ஹிஜ்ரி 96 (கி.பி. 711)ம் ஆண்டு முஹம்மத் பின் காஸிம் அவர்கள் ராஜா தாஹிரை தோற்கடித்து ‘சிந்துமற்றும் ‘முல்தானை’ வெற்றி கொண்டார்.
3.      ஹிஜ்ரி 107 (கி.பி. 725)ம் ஆண்டு ஹிஷாம் பின் அப்துல் மாலிக் உமையாக்களின் ஆட்சிக் காலத்தில்ஜூனைத் பின் அப்துர் ரஹ்மான் முர்ரீ அவர்கள் ‘மால்வா’ மற்றும் புரோச்’ ஆகிய இரு பெரும்நிலப்பரப்பை வெற்றிக் கொண்டார்கள்.
4.      ஹிஜ்ரி 160 (கி.பி. 776) ஆண்டு அப்பாஸிய கலீஃபாவான மஹ்தியின் உத்தரவின் பேரில் அப்துல் மலிக் பின்ஷிஹாய் அவர்கள் குஜராத்தில் ‘பார்பத்’ எனும் நகரத்தை வெற்றி கொண்டார்தபவுத் தாபியீன்களில்ஒருவரான ரபீஉபின் ஸபீஹ் (ரஹ்அவர்களும் இதில் பங்கேற்றார்கள்இவர்களின் அடக்கஸ்தலம்இன்றும் குஜராத்தில் உள்ளது.
5.      ஹிஜ்ரி 387 (கி.பி. 997) முதல் ஹிஜ்ரி 421 (கி,பி.1030) வரை ஆட்சி புரிந்த மஹ்மூத் கஜ்னவீ ஹிஜ்ரி 391 (கி.பி. 1001) முதல் ஹிஜ்ரி 418 (கி.பி. 1027)ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘லாகூர்முல்தான்,பெஷாவர்ராவல் பிண்டிநகர் கோட்காங்டாகன்னோஜ்மதுராசோம்நாத்’ ஆகிய பகுதிகளை கைப்பற்றபலதாக்குதல்களை மேற்கொண்டார்இறுதியில் பஞ்சாப்பும் சேர்ந்து முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ்வந்தது.
6.      ஹிஜ்ரி 567 (கி.பி.1171) முதல் ஹிஜ்ரி 602 (கி.பி. 1206) வரை ஆட்சி புரிந்த முஹம்மத் கோரி எனும்கஜ்னவீய்யாக்களின் ஆளுநர் ஹிஜ்ரி 589 (கி.பி. 1193)ம் ஆண்டு ஜெய்சந்தை தோற்கடித்து ‘டெல்லிஅஜ்மீர்,கன்னோஜ்’ ஆகிய இடங்களில் இஸ்லாமியக் கொடியை பறக்க விட்டார்.
7.      அடிமை வம்சத்து மன்னர்களின் ஆட்சி (துருக்கி வம்சத்து குத்புத்தீன் ஐபக் - முஹம்மத் கோரி உருவாக்கியஆட்சிக்கே அடிமை வம்சத்து மன்னர்களின் ஆட்சி என்ப்படும்) 85 வருடங்கள் ஹிஜ்ரி 602 (கி.பி. 1206) முதல்689 (கி.பி. 1290) வரை நடைபெற்றதுஇதில் முதலாவது ஆட்சியாளர் குத்புத்தீன் ஐபக் அவர்கள்தான்டெல்லி ஜாமி  மஸ்ஜிதையும்குதுப் மினாரையும் கட்டியவர்.
8.      ஹிஜ்ரி 689 (கி.பி. 1290) முதல் ஹிஜ்ரி 720 (கி.பி. 1320) வரை 33 வருடங்கள் ‘கில்ஜீ மன்னர்களின் ஆட்சிநடைபெற்றதுஇவர்களின் ஆட்சிக்கலத்தில்தான் குடிமக்களை நல்ல நிலையில் வைப்பது,போதையூட்டும் பெருட்கள் மீது கண்காணிப்பு மற்றும் விலைவாசியை குறைத்தது ஆகியவைகள்மேற்கொள்ளப்பட்டனமேலும்அரபீபார்ஸீதுருக்கிஅப்கானிதாத்தாரிசீனம்இந்தி ஆகிய மொழிகள்கலந்து உர்தூ எனும் புதுமொழி உருவானது.
9.      ஹிஜ்ரி 720 (கி.பி. 1320) முதல் 815 (கி.பி. 1413) வரை துக்ளக் மன்னர்களின் ஆட்சி (கில்ஜியர்களுக்குப் பின்இந்தியாவில் குடியிருந்த துருக்கித் தலைவர்களுக்கு ‘துக்ளக் மன்னர்கள்’ என்று பெயரிடப்பட்டது) 93வருடங்கள் நடைபெற்றது.
10. ஹிஜ்ரி 815 (கி.பி. 1413) முதல் 855 (கி.பி. 1451) வரை ஸைய்யிது வம்சத்து மன்னர்களின் அரசாட்சி 37வருடங்கள் நடைபெற்றது.
11.  ஹிஜ்ரி 855 (கி.பி. 1451) முதல் ஹிஜ்ரி 933 (கி.பி. 1526) வரை லோடி மன்னர்களின் அரசாட்சி 76 வருடங்கள்நடைபெற்றது.
மொகலாய பேரரசு நிறுவப்படுதல்:
ஹிஜ்ரி 923 முதல் ஹிஜ்ரி 933 வரை மக்களை கொடுமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தஇப்ராஹிம் லோடியை அடக்க வருமாறு அவனுடைய மாநில ஆளுநரான தவ்லத்கான் லோடி என்பவர்காபூலின் முகல் (மொகலாயமன்னரான ழஹூருத்தீன் முஹம்மத் பாபரை அழைத்தார்பானிபட்போரில் இப்ராஹிம் லோடியை பாபர் தோற்கடித்து டில்லியை வெற்றிகொண்டு மொகலாயப் பேரரசைநிறுவினார்.
ஹிஜிரி 933 (கி.பி. 1526) முதல் ஹிஜிரி 1253 (கி.பி. 1837) வரை போற்றத்தக்க 318 ஆண்டுகள் மொகலாயமன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
ஆங்கிலேயர்களின் தந்திரம்:
ஹிஜிரி 1221 (கி.பி. 1806) முதல் ஹிஜிரி 1253 (கி.பிவரை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசர்முஈனுத்தீன் அக்பர் பின் ஷாஹ் ஆலம் என்பவரை ஆங்கிலேயர்கள் எணுகி ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம்நன்கொடை தருவதாகக் கூறி தந்திரமாக ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
ஹிஜிரி 15 (கி.பி. 636)ல் ஹகம்பின் ஆஸ் (ரலிஅவர்களின் லட்சியத்தால் நிறுவப்பட்ட இஸ்லாமியஆட்சி ஹிஜ்ரி 1253ல் இலட்சத்திற்காக தாரை வார்க்கப்பட்டது.
இறுதியாக இந்தியாவின் கடைசிப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹிஜ்ரி 1253 (கி.பி. 1837) முதல்ஹிஜ்ரி 1274 (கி.பி.1857) வரை அரசர் பஹாதுர் ஷா ழஃபர் பின் அக்பர் ஸானி என்பவரை ஆங்கிலேயர்கள்கைது செய்து ரங்கூனுக்கு நாடு கடத்தினர்.
இறுதியாகஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
நூல்ஓர் உலகளாவிய வரலாறு பக்கம் 114-122
சுதந்திர போரும்முஸ்லிம்களும்..
கி.பி.1761 ஹைதர் அலிமைசூர் ராஜாவை அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.அதன்பிறகு கி.பி.1782ம் ஆண்டு மாவீரர் திப்பு சுல்தான் அரசரானார்.தந்தை ஹைதர் அலியும்அரசர் திப்புசுல்தானும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நான்கு போர்களை நடத்தியுள்ளனர்.உலக வரலாற்றில் முதன்முதலாக ராக்கெட்டை தயாரித்து ராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தியவர் என்ற பெருமையும் மாவீரர்திப்புவுக்கு உண்டு.
மாவீரர் திப்புவின் அமைச்சர் மீர்ஸாதிக்கின் துரோகத்தின் காரணமாக (கி.பி. 1796) ஹிஜ்ரி 1213ம்ஆண்டு துல்கஃதா பிறை 28 ஆங்கிலேயர்களால் திப்பு சுல்தான் ஷஹீத் ஆனார்.
v கி.பி. 1803 ஷாஹ் வலிய்யுல்லாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவீ (ரஹ்அவர்கள் இந்தியாவை ‘தாருல்ஹர்ப்’ - போராட்ட பூமி என ஃபத்வா-மார்க்கத்தீப்பு வழங்கினார்கள்.
v கி.பி. 1857 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்ஆங்கிலேயர்களை எதிர்த்து ஷாம்லிமைதானத்தில் போராடிய முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்இப்போரில் மகான் ஹாபிழ் ளாமின்ஷஹீத் (ரஹ்அவர்கள் ஷஹீத் ஆனார்கள்.
v கி.பி. 1857 முதல் 1867 வரை ஷாம்லி யுத்தத்திற்கு பின் பத்து வருடகாலமாக லட்சக்கணக்கான உலமாக்கள்மீதும்முஸ்லிம்கள் மீதும் பொய் வழக்கு போட்டு ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது.
v பல்வேறு போராட்டங்கள்கிளர்ச்சிகள்யுத்தங்கள்உயிரிழப்புகளுக்குப் பின் கி.பி. 1917ல் ஆங்கிலேயர்கள்இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதாக அறிவிப்பு செய்தனர்.
v பல்லாயிரம் ஆலிம்கள் பல இலட்சம் முஸ்லிம்களுடைய விலை மதிப்பற்ற உயிர்கள்அவர்கள் சிந்தியஇரத்தங்கள்விதவைகளாக ஆக்கப்பட்ட அவர்களின் மனைவியர்கள்அநாதைகளாக்கப்பட்ட அவர்களின்வாரிசுகள்சூறையாடப்பட்ட அவர்களின் சொத்துகள் இத்தனைக்கும் பரிசாகத்தான் 1947 ஆகஸ்ட் 15நள்ளிரவு இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
விடியட்டும் கொண்டாடலாம் என்று காத்திருந்த முஸ்லிம்களுக்கு அன்றிலிருந்து இன்று வரைஇந்தியாவில் விடியவே இல்லை.
காரணம்:
அன்றிலிருந்த முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர்.இந்திய விடுதலைப் போரில்வீரமிகு முஸ்லிம்கள் தியாகங்கள் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாறாகஆக்கப்பட்டு விட்டது.
ஸ்பெயின் பேரரசு:
தாரிக் பின் ஜியாத் அவர்கள் ஹிஜ்ரி 92 ரஜப் மாதம் கி.பி.711ம் ஆண்டில் ஏழாயிரம் படை வீரர்களுடன்வலீத் பின் அப்துல் மலிக்கின் ஆளுமையின் கீழ் உந்துலூஸ் - ஸ்பெயினை வெற்றிகொண்டார்.தலைவர்களை நியமிக்கும் பனியை பனூ உமையாக்களின் கலீஃபாக்கள் செய்துகொண்டிருந்தனர்.
v ஹிஜிரி 132 (கி.பி. 750)ல் பனூ அப்பாஸிய்யாக்கள் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டனர்.
v ஹிஜ்ரி 138 (கி.பி. 755) முதல் ஹிஜிரி 172 (கி.பி. 788) வரை அப்துர் ரஹ்மான் பின் முஆவியா என்பவர்குர்துபாயை தலைமையகமாக கொண்டு ஆட்சியை நிறுவினார்ஸ்பெயினில் ஒரு முன்னேற்றமானநிலை இவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுகுர்துபாவின் ஜாமிஆ மஸ்ஜிதைக் கட்டியவரும் இவரே.
v ஹிஜ்ரி 172 (கி.பி. 788) முதல் ஹிஜ்ரி 180 (கி.பி. 796) வரை ஹிஷாம் பின் அப்துர் ரஹ்மான் அவர்களும்
v ஹிஜ்ரி 180 (கி.பி. 796) முதல் ஹிஜ்ரி 206 (கி.பி. 821) வரை அப்துர் ரஹ்மான் பின் ஹகம் அவர்களும்
v ஹிஜ்ரி 238 (கி.பி. 852)முதல் ஹிஜ்ரி 273 (கி.பி. 886) வரை ஆட்சி செய்த முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான்அவர்களின் ஆளுமையின் கீழ்தான் ஆட்சி விரிவாக்கப்பட்டதுகட்டிடங்கள் கட்டப்பட்டதுகல்வியில்முன்னேற்றம் ஏற்பட்டது.
v ஹிஜ்ரி 273 (கி.பி. 886) முதல் ஹிஜ்ரி 275 (கி.பி. 888) வரை முந்திர் பின் முஹம்மத் அவர்களும்,
v ஹிஜ்ரி 275 (கி.பி. 888) முதல் ஹிஜ்ரி 300 (கி.பி. 912) வரை அப்துல்லாஹ் பின் முஹம்மத் அவர்களும்
v ஹிஜ்ரி 300 (கி.பி. 912) முதல் ஹிஜ்ரி 350 (கி.பி 961) வரை ஆட்சி புரிந்த அப்துர் ரஹ்மான் பின் முஹம்மத்அவர்களை ‘அமீருல் முஃமினீன்’ ‘கலீஃபாயே அஃலம்’ (பெரும் கலீஃபஆகிய பெயர்களில் அழைத்தனர்.மிக்க மதி நுட்பசாலியாகத் திகழ்ந்த அவர் ஸ்பெயினை ஒரு பசுமையான சொர்க்கலோகமாகஉருவாக்கினார்தற்போதைய ஐரோப்பாவின் முன்னேற்ற நிலை இவர்களின் முயற்சிக்குரிய பிரதிபலனாகும்இவர்களுக்குப் பிறகு 5 ஆட்சியாளர்கள் வந்தனர்பிறகு முறையான அரசாகஎதுவுமில்லாமல் மாநிலங்களாகவும்மாவட்டங்களாகவும் பிரிந்து சுயாட்சியின் முறை உருவானது.
v ஹிஜ்ரி 484 (கி.பி. 1091)ம் ஆண்டு ஆப்பிரிக்க தலைவர் மராபிதீன் யூஸூப் பின் தாஷ்கின் என்பவர்புகழ்பெற பல அரசர்களை பதவி நீக்கம் செய்து விட்டு ஸ்பெயினில் ஒரு அழகிய அரசை நிறுவினார்.ஹிஜ்ரி 541 (கி.பி. 1147) வரை அவரின் குடும்பத்தினரிடமே ஆட்சி இருந்து வந்தது.
v ஹிஜ்ரி 541 (கி.பி. 1147)ம் ஆண்டு முவஹ்ஹிதீன்கள் அரசைக் கைப்பற்றி போற்றத்தக்க முறையில்ஆண்டார்கள்பிறகு தமக்கிடையே நடந்த உள் நாட்டுப் போரால் அழிந்து போயினர்.
v ஹிஜ்ரி 626 (கி.பி. 1229)ம் ஆண்டு குர்துபாவை கிறிஸ்தவர்கள் கைப்பற்றினர்.
v ஹிஜ்ரி 897 (கி.பி. 1492)ம் ஆண்டு ஸ்பெயின் முழுவதும் ஐரோப்பியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு 800ஆண்டுகள் ஆட்சி செய்த மாட்சியை இஸ்லாமிய உலகம் இழந்தது.
நூல்ஓர் உலகளாவிய வரலாறு
பைத்துல் முகத்தஸூம்சிலுவைப்போர்களும்.
மிக்க தூய்மையானவன்தன் அடியாரை ஒர் இரவில் அழைத்துச் சென்றவன்மஸ்ஜிதுல்ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரைஅதன் சுற்றுப் புறங்களை அவன்அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான்எதற்காக அழைத்துச் சென்றானெனில் தன்னுடைய சான்றுகளைஅவருக்குக் காண்பிப்பதற்காக!
அல் குர் ஆன்: 17:1
இது தான் பைத்துல்முகத்தெஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றி அல்லாஹ் குறிப்பிடும் வசனம்.
நபி தாவூது (அலைநபி சுலைமான் (அலைஆகிய இருவராலும் நிறுவப்பட்ட மஸ்ஜிதாகும்.
2000 மனிதர்கள் ஒன்று சேர்ந்து அசைத்தாலும்அசைக்க முடியாத கற்களை கொண்டு ஜின்களைவைத்து நபி சுலைமான் (அலைஅவர்கள் கட்டியெழுப்பினார்கள்.
பைத்துல் முகத்தஸ் என்பதுஎப்படி மஸ்ஜிதின் பெயராக அழைக்கப்படுகிறதோ அவ்வாறே அந்தநகரத்தின் பெயராகவும் அழைக்கப்படுகிறது.
நபி தாவூது (அலைநபி சுலைமான் (அலைஆட்சி செய்த புண்ணிய பூமியும் இதுவே.
நபி ஜகாரிய்யா (அலைஅவர்களுக்கு நபி யஹ்யா (அலைமகளாகப் பிறக்கப்போகும்நன்மாராயத்தை அறிவித்த இடமும் இதுதான்.
நபி ஈஸா (அலைஅவர்கள் வாழ்ந்த இடமும் இங்கேதான்.
இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலைதாவூத் (அலை), சுலைமான் (அலை), மர்யம்(அலை), மூஸா (அலைஆகீயோரின் அடக்கஸ்தலங்களும் இன்னும் ஏராளமான நபிமார்களின்அடக்கஸ்தலங்களும் அங்கேதான்.
நபி (ஸல்அவர்கள் விண்ணேற்றப்பயணம் - மிராஃஜ் சென்றதும்இறை நம்பிக்கையாளர்களின் முதல்கிப்லாவும் இதுதான்.
மஸ்ஜிதுல் ஹராம்மஸ்ஜிதுந் நபவி இதற்கடுத்து இஸ்லாத்தில் புனிதம் நிறைந்த இடமாககருதப்படுவதும் இதுதான்.இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்துவம் நிறைந்த இடமான இங்கிருந்துகி.பி.33ல் நபி ஈஸா (அலைஅவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டது முதல் 1967ல் இஸ்ரேலியயூதப்படைகள் கைப்பற்றியது வரையிலான வரலாறு.
வரலாற்று நூல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதை இங்கே தருகிறோம்.
v கி.பி. 69 -ல் ரோமானியச் சக்கரவர்த்தி இதனை வெற்றி கொண்டார்.
v கி.பி. 136-ல் ரோமானியப் பேரரசன் ஹிட்ரியன் ‘ஈலியா கெப்பிட்டோலினா என இதற்குப் பெயர் சூட்டினார்.
v கி.பி. 336 -ல் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன.
v கி.பி. 614 -ல் பாரசீக மன்னர் இரண்டாம் குஸ்ரு வெற்றி கொண்டார்.
v கி.பி. 621 -ல் நபி (ஸல்அவர்கள் இங்கிருந்து மிராஃஜ் சென்றார்கள்.
v கி.பி. 628-ல் ரோமினியப் பேரரசர் ஹெராக்ளியஸ் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தார். (சமீபமானபூமியிலுள்ள ரோம்வாசிகள் தோல்வியடைந்தனர்எனினும் விரைவில் வெற்றியடைவார்கள் (அல்குர்ஆன்:30:1,2,3) என்ற திருமறை வசனங்களின் படி இது நிகழ்ந்தது).
v கி.பி. 637 -ல் உமர் (ரலிஅவர்களின் கையில் இந்நகரை பெரிய மதகுரு ஸொஃரானியஸ் ஒப்படைத்தார்.
v கி.பி. 969 -ல் ஃபாத்திமியக் கலீஃபா முயிஸ் இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி. 1084ல் துர்க்கோமன் தலைவர் உர்தக் இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி.1098-ல் மீண்டும் ஃபாத்திமியக் கலீஃபாக்கள் வெற்றி கொண்டனர்.
v கி.பி. 1099-ல் சிலுவைப் போர் வீரர்கள் இதனை வெற்றி கொண்டனர்எழுபதாயிரம் முஸ்லிம்கள்படுகொலை செய்யப்பட்டனர்அதன் காரணமாக குதிரைகளின் முழங்கால் அளவு இங்கு இரத்த ஆறுஓடியது.
v கி.பி. 1187ல் சுல்தான் ஸலாஹூத்தின் அய்யூபி (ரஹ்அவர்கள் வெற்றி கொண்டார்கள்அது மிஃராஜ்இரவாக இருந்தது.
v கி.பி. 1219ல் இரண்டாம் ‘ப்ரடெரிக்’ குடன் செய்த உடன்பாட்டின்படி கிறிஸ்தவர்களுக்குவிட்டுக்கொடுக்கப்பட்டது.
v கி.பி. 1239ல் முஸ்லிம்கள் மீண்டும் கைப்பற்றினர்.
v கி.பி. 1243ல் இது மீண்டும் கிறிஸ்தவர்களின் வசம் போனது.
v கி.பி. 1244ல் முஸ்லிம்கள் மீண்டும் கைப்பற்றினர்.
v கி.பி.1277ல் பெயரளவில் ஸிஸிலி அரசாங்கத்துடன் இது இணைக்கப்பட்டது.
v கி.பி. 1517ல் துருக்கி சுல்தான் முதலாம் சலீம் இதனை வெற்றிகொண்டார்.
v கி.பி. 1832ல் முஹம்மத் அலி பாதுஷா இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி. 1840ல் மீண்டும் துருக்கியின் வசம் போனது.
v கி.பி. 1918ல் பிரிட்டிஷ் மண்டேட் ஆட்சியின் வசம் போனது.
v கி.பி. 1948ல் ஜோர்தான் ஆட்சியின் கீழ்வந்ததுபயங்கரவாத இஸ்ரேல் நாடும் அப்போது தான் உருவானது.
v கி.பி. 1967ல் பைத்துல் முகத்தஸ் பறிபோனது.
நூல்இலங்கை கண்டி மெளலானா ஸலாஹூத்தீன் அவர்கள் எழுதிய சிறு நூல் தொகுப்பு பாகம்:2,பக்கம்: 66-75
இதில் 1099ல் சிலுவைப்படை வீர்ரகள் ஏற்படுத்திய கோரமான தாக்குதல்கள்தான் இஸ்லாமியஉலகை சீர் குலைத்தது.
அதனைத் தொடர்ந்து தாத்தாரியாக்களும்ஐரோப்பியர்களும் ஸ்பெயினை வீழ்த்துகிற போது,
அங்கிருந்த நூல்நிலையங்களை சூறையாடினர்.நடுவீதியில் முஸ்லிம்களின் அரிய நூல்களைதீயிட்டு கொளுத்தினர்.எந்தளவு எனில் வீடு வீடாகச் சென்று நூல்களை அள்ளியெடுத்து வீதியில் போட்டுதீவைத்து கொளுத்தினர்.பல நாட்களாக அதன் சாம்பல் ஸ்பெயின் நகரெங்கும் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.சுமார் 20 லட்சம் கிதாபுகள் அழிக்கப்பட்டன்.
பைத்துல் ஹிக்மா அடியோடு அழிக்கப்பட்டது.
ஃபுராத் நதியில் தண்ணீரில் கிதாபுகளையும்அறிவியல் நூல்களையும் கொண்டு ஐரோப்பியர்கள்ஒரே நேரத்தில் 7 குதிரைகள் ஜோடியாக செல்கிற அமைப்பில் (இன்றைய நான்கு வழிச்சாலை போல)பாலம் அமைத்தனர்.
            சுமார் ஒன்பது மாதங்களாக ஃபுராத் நதியின் தண்ணீரின் கலர் கிதாபுகள் எழுதப்பயன்படுத்தப்பட்டமையின் நிறமான கருப்பு கலரில் ஓடியது.
            மேலும்முஸ்லிம்களின் கைகளில் இருந்து கைநழுவிப்போன ஸ்பெயின் பேரரசின் குர்துபா ஜாமிஆமஸ்ஜித் இன்று நூதன சாலையாக மாற்றப்பட்டு இதில் கட்டாயம் செருப்பு அணிந்துதான் செல்லவேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.
முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?..
பொதுவாகவே வரலாற்றை வாசிக்கின்ற இந்த முஸ்லீம் சமூகம் அதில் தர்க்கம் செய்து கொண்டும்,விவாதம் செய்து கொண்டும் காலந்தள்ளுகிறது.
            யூசுப் (அலைஅவர்களுடைய வரலாற்றை வெகு அழகாக படம் பிடித்துக் காட்டும் குர் ஆன் ‘அந்தபெண்ணின்’ பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.
            குகைத்தோழர்களின் வரலாற்றைக் கூறும் குர் ஆன் அவர்கள் எத்தனை பேர்?எத்தனை காலம்குகையில் தங்கினார்கள்?என்பதை துல்லியமாக கூறவில்லை.
ஆதம் (அலைஅவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிற குர் ஆன் ஓரிடத்தில் கூட ஹவ்வா (அலை)அவர்களைப் பற்றி கூறவில்லை.
படிப்பினை பெறவும்நேர்வழி பெறவும் எது இந்த சமூகத்திற்கு தேவையோ அதைப்பற்றி மட்டுமேகுர் ஆன் நயம்பட வரலாறுகளைக் கூறுவதோடுவரலாற்றுக்கான நியதிகளையும் அது வரையறுத்துத்தந்துள்ளது.
ஆனால் எவைகளையெல்லாம் வேண்டாமென குர் ஆன் விட்டு விட்டதோ அவற்றை ஆய்வுசெய்வதிலேயே இஸ்லாமிய உம்மத் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது காலமெல்லாம்.
இன்றும் மத்ஹபை உண்டாக்கியவர்களாகவும்மத்ஹபின் விற்பன்னர்களாகவும் அறியப்படுகின்ற்நான்கு இமாம்களின் மன்னர்களுக்கெதிரான போராட்ட வாழ்க்கை இந்த உம்மத்தில் எத்துணை பேருக்குதெரியும்?.
            முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து வரலாறுகளின் மறுபக்கமும் இந்த உம்மத்திற்கு தெரியவேண்டும்.
            திரிபுகளற்றமாசற்ற உண்மையான வரலாற்றையும்மறைக்கப்பட்டமறக்கப்பட்ட அனைத்துவரலாற்றையும் வெளிகொணர்வதோடு நின்று விடாமல்அதை வாசித்தும்உள்ளுணர்வோடும்,உத்வேகத்தோடும் போராடி ‘இஸ்லாம் இந்த உலகத்தில் இழந்த பெருமையை மீட்டெடுத்துமீண்டும்
ISLAM IS A UNIVERSEL RELIGIONஎனும் பெயராக்கத்தை உருவாக்குவோம்.
அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாகஆமின்!
வஸ்ஸலாம்