widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Sunday, 11 August 2013

லால்பேட்டையின் இன்றைய மாணவர்கள்,மற்றும் இளைஞர்களின் நிலை ஓர் ஆய்வு….....!!

 
998451லால்பேட்டை என்ற உடன் அனைவரின்கண் முன்னும் நிற்பது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியும்,ஊரே ஒற்றுமை என என்னிலடங்கா சிறப்பு அம்சங்களாக எழுதிக்கொண்டே போகலாம்….


கடந்த ஒரு வருடங்களுக்கு முன் பெருநாள் அன்று நடந்த மோட்டார் சைக்கிளின் வாகன விபத்தை லால்பேட்டை சகோதரர்கள் மரந்திருக்கமாட்டோம்…..
விபத்து நடந்து முடிந்த மறுநாள் ஒருவர் மரணம்,15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து பின்னர் ஒருவரும் இறந்தது நம் ஊர் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...


*விபத்துக்குள்ளானவர்கள் இறந்தது மனதிற்கு மிகவும் வேதனையையும், கவலையையும் அளித்தது. வருடா வரும் இதே போன்று விபத்துக்கள் சந்தோசமான நாட்களில் நடப்பதைப் பார்க்கிறோம்....

தங்கள் குழந்தை செல்வங்கள் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கிறது என்கிற பெயரில்,தங்கள் பிள்ளைகள் இணைந்திருக்கும் நண்பர்களையும்,செல்லுகின்ற இடங்களையும் ஒரு முறையாவது கண்காணித்துள்ளோமா,கேட்டிருக்கிறோமா? என்றால் பெரும்பாலான பெற்றோர்களிடமிருந்து இல்லை என்கிற பதில் தான் மேலோங்கி நிற்கும்.இது கண்டிப்பாக களையப்பட வேண்டிய ஒன்று!தின்ந்தோறும் இல்லா விட்டாலும் வாரம் ஒரு முறையோ மாதம் இரு முறையோ அவர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் கண்காணிப்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.அப்படி இருந்தால் தான் நாம் எதிர்பார்க்கும் பிள்ளைகள் எதிர்கால குடும்ப முன்னேற்றத்திர்க்காகவும், சமுதாயத்திற்காகவும் உருவெடுப்பார்கள்.இவ்வளவு தகவல்களையும் தருவதற்க்கு காரணம்,தற்பொழுதுள்ள நிலையில் லால்பேட்டையில் இளைஞர்களும்,மாணவர்களும் பெரும்பாலானவர்கள் பொறுப்பற்று காலத்தை மட்டுமல்லாது காசுகளையும் வீணடித்துக் கொண்டிருக்கும் அவல நிலைதான் என்பதை கனத்த இதயத்தோடு பதிவு செய்கிறோம்.

எல்லாவற்றிர்க்கும் மூல காரணமாக அமைவது நல்லொழுக்கமும், நன்னடத்தை மிகுந்த வளர்ப்பும் தான்.இதில்எந்த குறைபாடும் இல்லை என்பதை மார்தட்டிக்கொள்ளும் எவரும் ஒரு நிமிடம் யோசிக்கட்டும்…?

லால்பேட்டையே சேர்ந்த இஞைர்கள் பந்தா காமிப்பதா என்னி சிட்டா சீரீற்று செல்லும் காட்சிகள் தெருவில் நடமாடுவோர் கூட பயந்து செல்லும் அவல நிலையாகத்தான் உள்ளது....

இரு சக்கர வாகனங்கள் (பைக்) நம்முடைய சவுகரியத்திற்க்காக நம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள், வேகமாக செல்வதற்க்கு அல்ல, சோகத்திலே பெரிய சோகம் புத்திர சோகம் (பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோரின்சோகம்) என்றல்லாம் நான் படிக்கும் போது என்னுடைய பள்ளியின் ஆசிரியர் வேகமாக செல்லக்கூடாது என்பதற்காக சொல்லி காட்டுவார். ஆனால் இன்றோ ஆசிரியர் சைக்கிளில் வந்தால் மாணவன் பல்சரில் வருகிறான். தவறில்லை. அதற்குரிய வசதி இருந்தால் அனுபவித்துக் கொள்ளலாம். சில இடங்களில் நான் பத்தாவது பாஸ் செய்தவுடன் எனக்கு பைக் வாங்கித்தர வேண்டும் என்ற வேண்டுகோளுக்கினங்க மாணவர்கள் படிக்கிறார்கள். தாங்கள் படிப்பது பெற்றோர்களுக்காக தான் என்ற நினைப்பு பல மாணவர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. தங்களுடைய தகப்பனார் வெளிநாடுகளில் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும் கூட குழந்தைகள் பெற்றோர்களை அகல கால் வைக்க முனைப்பு காட்டும் போது லோனில் பைக் எடுத்து, அவர்கள்படும் அல்லல் பல மாணவர்களுக்கு புரிவதில்லை. இத்தனையும் மீறி அவன் ஏதாவது விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ, அல்லது உறுப்புகளை இழந்த்தாலோ அதனால் வரும் தொடர் இன்னல்கள் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

நான் சிறு வயதில் இருந்தபொழுது 15 வருடங்களுக்கு முன் என்னுடைய மாமா சவூதியில் விபத்தில் சிக்கியதால் அது அவருடைய வாழ்க்கைய புரட்டிப்போட்டது...காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வேகமாக வந்த கார் போதியதில் நிலைதடுமாரி உயிரிழந்தார்...நமதூரை சேர்ந்த மூன்று பேர் பயனித்த காரில் என்னுடைய மாமாவும் இறந்தார்...பின்பு அவருடைய குடும்பங்கள் பற்ற துன்பங்கள் சொல்லென்னாத் துயரங்கள்...

மீல முடியாத சோகத்தை தாய்க்கு, தந்தைக்கு, தமையனுக்கு, சகோதரிகளுக்கு, பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு கொடுக்க உங்களுக்கு விருப்பமாக இருந்தால் வேகமாக செல்லுங்கள்.

விபத்துகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்:

தற்போது நம் ஊர் உள்ள சூழ்நிலையில் நம்மால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டாமல் இருக்க முடியாது. ஆனால் நம்மால் கவனமாக, மெதுவாக, நிதானமாக போக முடியும். இப்போது சில இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வேகமாக ஓட்டுவதால் நாம் எதையும் சாதித்துவிட முடியாது. என்ன தான் அவசரமாக இருந்தாலும் வேகமாக வண்டியை ஓட்டுவதால் இழப்பு என்று ஏற்பட்டால் (நமக்கோ அல்லது பிறருக்கோ) அதை நம்மால் ஈடு கட்ட முடியாமல் போய்விடலாம்.

1.முடிந்தவரை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் நலம் கருதி இரு சக்கர வாகனங்கள் (பைக்) வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்போம்.

2.நம்முடைய லால்பேட்டை க சாலை மிகவும் குறுகிய சாலை(சில இடங்களில்) ஆகவே அவ்விடங்களில் வாகனங்களை முந்துவதை தவிர்த்துக் கொள்வோம்.

3.வீட்டிற்கு தெரியாமல் ஊர் சுத்துவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிவிட்டு செல்வோம்.

4.முடிந்தவரை இரவில் இருசக்கர வாகனத்தில் தொலைதூரபயனம் செல்வதை நாம் தவிர்ந்துக் கொள்வோம்

5.இரவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் மனைவி மற்றும் குழந்தையோடு செல்வதை முற்றிலும் தவிர்ப்போம்.

6.பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றால் அவர்களுடைய புர்கா, ஷால் சக்கரத்தில் சிக்காது பார்த்துக் கொள்வோம்.

7.நம்மிடத்தில் தான் எல்லா கண்ட்ரோலும் இருக்கிறது என்று நினக்காமல் இறைவன் நம்மை கன்ரோல் செய்கிறான் என்ற எண்ணத்தை நம் மனதில் வைத்து மெதுவாக, நிதானமாக வண்டிகளை ஓட்டிச் செல்வோம்.

8.எவ்வளவு முக்கிய செல் அழைப்புகளாக இருந்தாலும், வண்டி ஓட்டும் போது (காரோ அல்லது இரு சக்கர வாகனமோ) அழைப்பை ஏற்காதீர். (கால்களை அட்டெண்ட் செய்யாதீர்)

9.வண்டிகளுக்கு இன்ஷுரன்ஸ்,ஓட்டுனருக்கு லைசன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விபத்து நடந்தால் இது இல்லாமல் இருந்தால் கோர்ட், வழக்கு என்று இன்னமும் சிக்கலாகி விடும். (இன்ஷுரன்ஸ் இல்லாததற்க்கு, வழக்கு, லைசன்ஸ் இல்லாதற்கு வழக்கு போன்ற வழக்குகள்)

10.ஹெல்மெட் அணியும் பழக்கத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வருவோம். (வெளியூர் பயணத்திலாவது)

இவ்விஷயத்தில் பெற்றோர்கள் உஷாராக இருந்து தங்களின் வாரிசுகளை வழி நடத்த முன்வர வேண்டும்!


முக்கியமாக: எனதூர் லால்பேட்டையில்.............இதுபோல பலபேர்கள் மரணமடைய காத்துகொண்டு இருக்கிறார்கள்...................
இறைவன்தான் அவர்களையும், அவர்களால் வருந்தும் பெற்றோர்களையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்..............ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரூம்....


புகைப்படம்:- ஒரு விழிப்புணர்வுக்காக போடப்பட்டது...